2018-ல் விஜய் தான் வசூல் மன்னன்... 2.0 அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலும் சர்கார் வசூலை நெருங்காத சோகம்!

By sathish kFirst Published Dec 28, 2018, 8:05 PM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.O  படம் வசூல் வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  சர்கார் படத்தின் வசூலை மிஞ்சவில்லை என்றே சொல்லலாம்.  

இந்த ஆண்டில், முன்னணி நடிகர்களில் அஜித்தை தவிர மற்ற நடிகர்களின் படம் வெளியானது.  வெளியான படங்களில் வியாபாரத்தில், தியேட்டர் வசூலில் விஜய் தான் முதலிடத்தில் உள்ளார்.

கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான  கபாலி, காலா, 2.0  என்ற மூன்று படங்களும் விஜய் படத்தின் வசூலை மிஞ்ச முடியவில்லை. இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா, நீண்ட நாள் தயாரிப்பான பிரமாண்ட படம் 2.0  வெளியானது. தமிழக திரையரங்குவசூலில் விஜய் நடித்த படங்களின் வசூல் சாதனையை  முறியடிக்க முக்கியது. 

சர்கார் தமிழகத்தில் முதல் மூன்று வாரங்களில் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை சர்வ சாதாரணமாக அள்ளியது. ஆனால், அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆன 2.0 வெறும் 80 கோடி ரூபாய்  எடுக்கவே மூன்று வாரங்களாக முக்கியது. இயக்குனர் ஷங்கர் இன்ச் இன்ச்சாக செதுக்கியுள்ளதாக பாராட்டி வருகின்றனர். ஹாலிவுட் படத்திற்கு நிகராக இப்படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் நாக்கு தள்ளியது உண்மை.

குறிப்பாக சென்னையில் மட்டும் இப்படம் முதல் நாளில் 2.64 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக இந்த வருட தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் படம் 2.34 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில் 2.O இந்த சாதனையை முறியடித்துள்ளது. 

ஆனால், தமிழகம் மொத்தமாக கணக்கிட்டால், சர்கார் படத்தை காட்டிலும் அதிகமான தியேட்டர்களில் 2.O படம் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் முதல் நாள் தமிழகத்தில் சுமார் ரூ.13 கோடி அளவில் மொத்த வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர் விநியோக வட்டாரத்தில். சர்கார் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் ரூ.31 கோடி. இதனை 2.O படத்தின் முதல் நாள் வசூல் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓப்பனிங் இல்லாததால் இது நடக்கவில்லை. 

click me!