வாயை விட்டு மாட்டிய ரஜினி... நடிகையின் நிர்வாண போராட்டம்... வைரமுத்துவை சிக்கவைத்த சின்மயி! 2018 சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்!

By manimegalai aFirst Published Dec 28, 2018, 6:03 PM IST
Highlights

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "போராட்டம் வன்முறையாக மாறுவதற்கு சமூகவிரோதிகளின் ஊடுருவல் தான் காரணம்" என்று சொல்லிவிட்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று சென்றால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என அறச்சீற்றம் காட்டினார்" சூப்பர் ஸ்டார்.

ரஜினிகாந்த்:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "போராட்டம் வன்முறையாக மாறுவதற்கு சமூகவிரோதிகளின் ஊடுருவல் தான் காரணம்" என்று சொல்லிவிட்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று சென்றால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என அறச்சீற்றம் காட்டினார்" சூப்பர் ஸ்டார்.

அடுத்த சில நாட்களிலேயே 'காலா' படத்தில் போராட்டத்திற்கு அழைத்தார்.  7 பேர் விடுதலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப  எந்த 7 பேர் என கேட்டதும், பின் விளக்கம் கொடுத்ததும் சர்ச்சையாகவே பார்க்கப்பட்டது.

ஸ்ரீரெட்டி:

சினிமாவில் நடித்து வாங்காத பெயரை ஸ்ரீலீக்ஸ் என்ற டைட்டிலில் சில தகவல்களை வெளியிட்டு டோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் பெயர் வாங்கினார் ஸ்ரீ ரெட்டி.  

படவாய்ப்புகள் தருவதாகச் சொல்லி தன்னை பயன்படுத்திக் கொண்டனர் என்று தயாரிப்பாளர் இயக்குனர் ஹீரோக்கள் உட்பட பல சினிமா பிரபலங்கள் மீது குற்றம்சாட்டி பூகம்பத்தை கிளப்பினார். ஒரு நிலையில் நிர்வாண போராத்திலும் குறித்தார். இதனால் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் கிளம்பின.

அவரால் குற்றம் சாட்டப்பட்ட ராகவா லாரன்ஸ்,  தன் படத்தில் நடிக்க அழைத்து அனைவரையும் அதிரவைத்தார்.   இப்போதும் சில ஹாட் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

ஆண்டாள் விஷயத்தில் சிக்கிய வைரமுத்து:

கவிஞர் வைரமுத்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆண்டாள் தாசி குலத்தைச் சேர்ந்தவர் என அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் தெரிவித்திருப்பதாக கூறியிருந்தார்.  

இதைதொடர்ந்து ஆண்டாளை அவமதித்த வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக போராட்டங்களை நடத்தியது , மேலும் இந்து மதத்தை சேர்ந்த பலர் வைரமுத்துவுக்கு எதிராக போர் கொடி தூக்கினர்.

மீடூ சர்ச்சை:
 
பாலிவுட் திரையுலகில் உருவான 'மீடூ' புயல் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சென்னையில் உள்ள நடனப்பள்ளியில் தொழிலதிபர் ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்று நடிகை அமலாபால் ஆரம்பித்து வைத்தார். 

இதை தொடர்ந்து, அக்டோபரில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது எழுப்பிய புகார்களுக்கு பிறகு சூடு பிடித்தது இந்த விவகாரம். சின்மயியை தொடர்ந்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை சமூக தளங்களின் மூலம் அம்பலப்படுத்தினார்கள் தற்போது வரை இந்த விவகாரம் புகைந்து கொண்டே தான் உள்ளது.

சர்கார் பிரச்சனை:

தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்தித்து வரும் விஜய்யின் படத்திற்கு கடைசியாக வந்தது கதை பிரச்சனை. துணை இயக்குனர் வருண் என்பவர், தன்னுடைய 'செங்கோல்' படத்தின் கதை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தார்.  திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் பாக்யராஜ், துணை இயக்குனருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால், பற்றி எறிந்த இந்த பிரச்சனை  இறுதியில் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு வந்தது. படம் வெளியாகி டைட்டில் கார்டில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.  

click me!