“வீடு, வீடாக போய் கூப்பிடுவேன்”... சிஸ்டத்தை சரி செய்ய ரஜினி போட்ட ஸ்கெட்ச்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 12, 2020, 10:53 AM IST
Highlights

தொடர்ந்து வேட்பாளர்கள் குறித்து பேசிய ரஜினிகாந்த் நான் கட்சி ஆரம்பித்தால் இளைஞர்களுக்கே முன்னுரிமை என்றும், நேர்மையான, சிறப்பாக செயல்படக்கூடிய, நல்லது செய்ய வாய்ப்பு கிடைக்காமல் இருக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற நல்ல அரசு அதிகாரிகள் நிறைய பேர் உள்ளனர். 

கடந்த 5ம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த ஆலோசனை கூட்டம் நன்றாக நடைபெற்றது. ஆனால் அதில் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தனக்கு ஏமாற்றம் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார். 

இதையும் படிங்க: ரூட்டை மாற்றி ஸ்ரைட்டாக அடித்த ரஜினிகாந்த்... வெற்றிடம் குறித்து ஓபன் டாக்...!

அதுகுறித்தும், மாவட்ட செயலாளர்கள் குறித்தும் தேவையில்லாத வதந்திகள் பரவி வருவதாகவும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இன்று செய்தியாளர்களை சந்தித்ததாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியலுக்கு வருவதற்கு 3 திட்டங்கள் வைத்திருப்பதாகவும், அதை மக்களுக்கு தெளிவுபடுத்திய பிறகே கட்சி ஆரம்பித்தால் சிறப்பாக அமையும் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: தமிழகம் தலைநிமிர மக்கள் இதை செய்தே ஆகவேண்டும்... 2021ல் மாபெரும் அரசியல் புரட்சிக்கு அடிப்போட்ட ரஜினி..!

தொடர்ந்து வேட்பாளர்கள் குறித்து பேசிய ரஜினிகாந்த் நான் கட்சி ஆரம்பித்தால் இளைஞர்களுக்கே முன்னுரிமை என்றும், நேர்மையான, சிறப்பாக செயல்படக்கூடிய, நல்லது செய்ய வாய்ப்பு கிடைக்காமல் இருக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற நல்ல அரசு அதிகாரிகள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை நானே வீடு, வீடாக சென்று கூப்பிடுவேன். வாங்க சிஸ்டர் கெட்டுகிடக்கு சரி செய்யலாம் வாங்க என கையை பிடித்து அரசியலுக்கு கூப்பிட்டு வருவேன் என்று தெரிவித்தார். 

click me!