ஷூட்டிங் போன இடத்தில் ஆஸ்கார் நாயகனுக்கு ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல்... அதிர்ச்சியில் திரையுலகம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 12, 2020, 10:08 AM IST
Highlights

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகர் டாம் ஹேங்ஸ் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது, ஹாலிவுட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே கொலை நடுங்கும் அளவிற்கு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்த மருத்திற்கு இதுவரை முறையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததே இதற்கு காரணம். சீனாவில் இதுவரை கொரோனா தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,169 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!

இந்நிலையில் பாரஸ்ட் கம்ப் மற்றும் பிலாடெல்பியா ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகர் டாம் ஹேங்ஸ் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது, ஹாலிவுட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

pic.twitter.com/pgybgIYJdG

— Tom Hanks (@tomhanks)

அதில், நானும் எனது மனைவி ரீட்டாவும் பட தயாரிப்பு பணிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தோம். அங்கு சென்றதும் எனக்கு லேசான உடல் சோர்வும், சளி தொல்லையும் ஏற்பட்டது. அதேபோல் எனது மனைவிக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டோம். அப்போது எங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

click me!