குறிவச்சா இரை விழனும்; சூர்யாவுக்கு வார்னிங் கொடுக்கிறாரா ரஜினி? வைரலாகும் வேட்டையன் டப்பிங் வீடியோ

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் டப்பிங்கில் சூப்பர்ஸ்டார் கலந்துகொண்டபோது எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.

வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு தொடங்கப்பட்டு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஸ்டிரா என பல்வேறு மாநிலங்களில் படமாக்கப்பட்டது. அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளதால், இந்த காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

Latest Videos

இதையும் படியுங்கள்... கேரவனில் கேமரா; எல்லா நடிகைகளுடைய டிரஸ் மாத்துற வீடியோ வச்சிருக்காங்க - ராதிகா சொன்ன பகீர் சம்பவம்

வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆயுத பூஜை விடுமுறையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக வேட்டையன் திரைக்கு வருகிறது. அப்படத்துக்கு போட்டியாக சூர்யாவின் கங்குவா படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வேட்டையன் படக்குழு ஒரு மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ள படக்குழு, டப்பிங்கின் போது அவர் பேசியதையும் வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். அதில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசி முடித்துவிட்டு, டைரக்டர் சார் சூப்பர் சார் என இயக்குனர் ஞானவேலை வியந்து பாராட்டி இருக்கிறார் ரஜினி. அதுமட்டுமின்றி குறிவச்சா இரை விழனும் என அவர் பேசும் வசனமும் அந்த டப்பிங் வீடியோவில் ஹைலைட்டாக காட்டி இருக்கிறார்கள். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சூர்யாவுக்கு சூசகமாக ரஜினி வார்னிங் கொடுப்பதாக கூறி வருகின்றனர்.

Kuri Vechha… Erai Vizhanum. 🦅 Superstar at the dubbing session. 🎙️ Watchout VETTAIYAN 🕶️ is on the way. 🔥

Releasing on October 10th in Tamil, Telugu, Hindi & Kannada! 🕶️ … pic.twitter.com/BUDMuC5jeq

— Lyca Productions (@LycaProductions)

இதையும் படியுங்கள்... எவ்ளோ நேக்கா காப்பி அடிச்சிருக்காரு பாருங்க; ஒரே வரியை 2 பாடல்களில் பயன்படுத்திய வைரமுத்து!

click me!