போலீஸ் யூனிபார்மில் சிங்கம் போல் வந்திறங்கிய ரஜினி... லீக்கான வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ

By Ganesh A  |  First Published Feb 28, 2024, 12:16 PM IST

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் தயாராகி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப் பச்சன், விஜய் டிவி ரக்‌ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு கேரளாவில் தொடங்கியது. இதையடுத்து நாகர்கோவில், சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தி வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... மீண்டும் முத்துவேல் பாண்டியன் பராக்.. பராக்..! 'ஜெயிலர் 2' படத்தை கன்ஃபாம் செய்த பிரபலம்! குஷியான ரசிகர்கள்!

இந்நிலையில், போலீஸ் யூனிபார்மில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு காரில் வந்த ரஜினிகாந்தை பார்த்ததும் மெய்சிலிர்த்து போன ரசிகர்கள், விசிலடித்து வரவேற்றனர். பின்னர் அவர்களைப் பார்த்து கையசைத்தபடி ஷூட்டிங் நடைபெறும் இடத்துக்கு சென்றார் ரஜினிகாந்த். அவர் போலீஸ் கெட்டப்பில் பார்ப்பதற்கு மிகவும் யங் ஆக தெரிவதாக கூறி நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்துடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடித்து முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. அதன் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ளது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தின் 2-ம் பாகத்திலும் ரஜினி நடிக்க கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

the COP💥 🤘

pic.twitter.com/svryV8Db0d

— Rajini✰Followers (@RajiniFollowers)

இதையும் படியுங்கள்... நான் பண்ணது தப்பு தான்... பூதாகரமான சால்வை விவகாரம்; மன்னிப்பு கேட்ட சிவகுமார் - வீடியோ இதோ

click me!