
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான, 'ஆனந்தம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லிங்குசாமி. மம்முட்டி, தேவியானி, அப்பாஸ், சினேகா, முரளி, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி.. தமிழ்நாடு ஸ்டேட் ஃபிலிம்ஸ் விருதையும் வென்றது. இதைத் தொடர்ந்து ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர், போன்ற பல படங்களை இயக்கினார்.
படம் இயக்குவதை தாண்டி பையா, வேட்டை, அஞ்சான், வழக்கு என் 18 /9, உத்தம வில்லன் போன்ற சில படங்களை தயாரித்தும் உள்ளார். இயக்குனர் லிங்குசாமிக்கு ராதாகிருஷ்ணன், கேசவன், என இரண்டு அண்ணன்களும் சுபாஷ் என்கிற தம்பியும் உள்ளவர். கேசவன் கும்பகோணத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊரான குடவாசலில் திருப்பதி மளிகை ஸ்டோர்ஸ் ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு மட்டுமின்றி லிங்குசாமி துவங்கிய தயாரிப்பு நிறுவனமான, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில் இவர் இன்று காலை கேசவன் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு வயது 60. இதை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு, இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணனை இழந்து தவித்து வரும் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் மறைந்த லிங்குசாமியின் சகோதரர் கேசவனின் மகன் வினோத் கோலிசோடா 2, திரைப்படத்தில் 3 நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். இது தவிர தற்போது லிங்குசாமி இயக்கி உள்ள 'நான் தான் சிவா' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.