
தமிழக அரசியல் களம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம், சசிகலா சிறைக்கு சென்றது, அதிமுகவில் தினகரன் தலைமை தாங்கியது, பிரிந்திருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றிணைந்தது, ரஜினி கமலின் அரசியல் நிலைப்பாடு, சுயேட்சை வேட்பாளரான தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியது என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த 21 வருடங்களாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என சொல்லிக்கொண்டிருந்த ரஜினி, ஒரு வழியாக அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்க போவது உறுதி என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவித்தார். தான் ஆன்மிக அரசியலில் ஈடுபட போவதாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்றும் அறிவித்தார். தற்போது ரசிகர்களையும் மக்களையும் உறுப்பினர்களாக ஒன்றிணைக்கும் வகையில் "ரஜினி மக்கள் மன்றம்" என்ற இணையதளத்தை தொடங்கி அதில் உறுப்பினர்களாக சேரும்படி அழைப்பும் விடுத்தார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினி தனிக்கட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு எத்தனை சீட் கிடைக்கும் என ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.
அதில் ரஜினிக்கு 33.7 % வாக்குகள் பெற்று 23 தொகுதிகளில் வெற்றி பெறுவார் என்றும் அவருக்கு அடுத்தபடியாக திமுக 28.3% வாக்குகள் பெற்று 14 சீட்டுகள் கிடைக்கும் என்றும் ஆளும் அதிமுக அரசுக்கு வெறும் 2 சீட் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் ஒரு சீட் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவர் பாஜக மற்றும் காங்கிரசுக்கு கடும் சவாலாக இருப்பார் என்றும், மேலும் அதிமுக திமுகவிற்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒரு இடம் கூட கிடைக்காமல் போனாலும் பாஜகவுக்கு 8.9% வாக்குகள் கிடைக்கும் எனவும் காங்கிரசுக்கு 1.2 % வாக்குகள் கிடைக்கும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.