
நியுயார்க் நகர தெருவில் நடிகர் ஆலன் பவலும், ப்ரியங்கா சோப்ராவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழன் படத்தில் விஜய்யுடன் வந்து ”ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லா ஊட்டி” என்று விஜய்யுடன் டூயட் பாடிய ப்ரியங்கா சோப்ராவை அவ்வளவு சீக்கிரம் தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
2000 மாவது ஆண்டு உலக அழகியாக தேர்வான ப்ரியங்கா, தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மேரி கோம் படத்தில் மேரி கோமின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பிரியங்காவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஹாலிவுட் திரையுலகில் கால்பதித்த இவர், தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் ஹாலிவுட் தொடரில் நடித்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபலமான தொடராக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குவான்டிகோ-வில் ப்ரியங்கா நடித்து அசத்தியுள்ளார். தற்போது இந்த தொடர் இரண்டு சீசன்கள் முடிந்து, மூன்றாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது சீசனுக்கான ஷூட்டிங் அண்மையில் தொடங்கியுள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ப்ரியங்காவும் குவான்டிகோ நடிகர் ஆலன் பவலும், நியூயார்க் நகரில் நடுரோட்டில் நின்றபடி லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.
ப்ரியங்காவும், ஆலனும் கொடுத்த முத்தக்காட்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மூன்றாவது சீசனுக்காக தனது நடை, உடை, பாவனைகளை மாற்றியுள்ளார் ப்ரியங்கா. மேலும் இந்த தொடரில் நடித்ததற்காக விருதுகளையும் வாங்கியுள்ளார் பிரியங்கா. பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் கலக்கும் ப்ரியங்காவை பார்த்து மற்ற நடிகைகளுக்கும் ஹாலிவுட்டிற்கு பறக்க ஆசை ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.