
'சகாப்தம்' படத்தை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மதுரவீரன்' கிராமத்து கதைக்களத்தில், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பிஜி.முத்தையா இயக்கியுள்ள இந்த படம் பொங்கல் திருநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத காரணத்தால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் உலாவருகிறது.
சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், மீனாட்சி என்கிற அறிமுக நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, பாலசரவணன், ஜி.மாரிமுத்து மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.