சினிமாவில் வெற்றி பெற்ற பானுப்பிரியாவிற்கு... வாழ்கையில் ஏற்பட்ட சோகம்?

 
Published : Jan 19, 2018, 07:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
சினிமாவில் வெற்றி பெற்ற பானுப்பிரியாவிற்கு... வாழ்கையில் ஏற்பட்ட சோகம்?

சுருக்கம்

actress banupriya sad life story

ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து 80களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வந்தவர் கண்ணழகி பானுப்பிரியா. 

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த இவர் சிறந்த பரத நாட்டிய கலைஞர். இவரின் நடன திறமையாலும் அழகாலும் கிடைத்தது தான் இந்த சினிமா வாய்ப்பு. 

தான் நடிக்கும் கதாப்பத்திரங்களை மிகவும் நேர்த்தியாக தரமான படங்களை தேர்தெடுத்து, குடும்ப பாங்கான நடிகையாக வளம் வந்த நடிகைகளில் இவரும் ஒருவர் எனலாம்.

இதுவரை தமிழில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருடைய தங்கை சாந்தி பிரியாவும் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' மற்றும் ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகை பானுப்ரியா முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தில் இருந்த போதே, 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

கணவருக்கும் இவருக்கும் ஒரு சில காரணத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2005 ஆம் ஆண்டு கணவரிடம்  இருந்து விவாகரத்து பெற்று அமெரிக்காவில் இருந்து மீண்டும் சென்னைக்கே தன்னுடைய மகளுடன் வந்து செட்டில் ஆனார்.

பின்னர் சின்னத்திரை சீரியல் மற்றும் படங்களில் நடிக்க துவங்கிய இவர் தற்போதும் முன்னணி நடிகர்களுக்கு அம்மா, உள்ளிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிகை ஜோதிகாவுடன் நடித்த 'மகளிர் மட்டும்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கணவரை விட்டு பிரிந்தவுடன் ஒரே ஆளாக இருந்து தன்னுடைய பெண்ணை வளர்த்து வரும் இவருடைய ஒரே கனவு இவருடைய மகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பது மட்டும் தானம். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?