காலா" இசை வெளியீட்டு விழாவால் ரசிகருக்கு நேர்ந்த சோகம்...! இரு கால்கள் துண்டாகியது...?

 
Published : May 10, 2018, 02:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
காலா" இசை வெளியீட்டு விழாவால் ரசிகருக்கு நேர்ந்த சோகம்...! இரு கால்கள் துண்டாகியது...?

சுருக்கம்

rajinikanth fan met accident lost two legs

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் மட்டும் இன்றி, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் காசி விஸ்வநாதன் என்பவர் வந்துள்ளர். இசை வெளியீட்டு விழா முடிந்த பின்,  ரயில் மூலம் தன்னுடைய சொந்த ஊரான மதுரைக்கு திரும்பியுள்ளார். 

இவர் பயணசீட்டு முன்பதிவு செய்யாததாலும், ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், ஆபத்தை உணராமல் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ரயில், மறைமலையடிகள் இரயில் நிலையத்தை அடைந்த போது, நடைமேடை வருவதை கவனிக்காமல் காசி விஸ்வநாதன் அமர்திருந்ததால் நடைமேடையில் காசி விஸ்வநாதனின் இரு கால்களும் மோதி துண்டாகின. 

தற்போது இவர் சிகிச்சைக்காக இராஜிவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

மேலும் "காலா" இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ராசிகரின் கால்கள் துண்டாக்கப்பட்ட தகவல் பலருக்கும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ