Rajinikanth: அரசியலுக்கு வராதது ஏன்? - நடிகர் ரஜினிகாந்த் தெளிவான விளக்கம்!

By SG Balan  |  First Published Mar 12, 2023, 12:14 AM IST

தான் அரசியல் கட்சியை தொடங்காததன் பின்னணியையும் அதற்கான காரணத்தையும் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் சனிக்கிழமை மாலை சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் பேசிய ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சியை தொடங்காதது ஏன் என்று மனம்திறந்து பேசினார்.

அரசியல் கட்சி தொடங்குவதைக் கைவிட்டதற்கான காரணத்தைப் பற்றி அவர் பேசியாதாவது:

Latest Videos

நான் அரசியலுக்கு வரலாம் என்று முடிவு செய்திருந்தேன். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக கொரோனா வந்தது. சிறுநீரக பாதிப்புக்கு நான் மருத்துகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டது. ஆனால் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டேன். அதிலிருந்து பின்வாங்க முடியாது. இதைப்பற்றி டாக்டர் ரவிச்சந்திரனிடம் கூறினேன்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டபோது ரஜினிக்கு வந்த சந்தேகம்? வீடியோ..!

அதற்கு அவர், "கொரோனா இரண்டாவது அலை ஆரம்பமாகிவிட்டது. இப்போது நீங்கள் பிரசாரத்துக்குச் சென்று மக்களைச் சந்திப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இரண்டாவது அலை தொடங்கிவிட்டது. அப்படி பொது நிகழ்ச்சிகளில் பங்பேற்பதாக இருந்தால் 10 அடி இடைவெளியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக் கவசத்தைக் கழற்றவே கூடாது." என்று ஆலோசனைகள் கூறினார்.

ஒரு மருத்துவர் என்ற முறையில் உங்களை வெளி இடங்களுக்குச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றும் டாக்டர் கூறினார். நான் வேனில் ஏறியாவுடன் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள். அப்படி இருக்கும்போது கூட்டத்திற்கு மத்தியில் 10 அடி இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டுமென்றால் முடியுமா? சான்ஸே கிடையாது.

"இப்படிப்பட்ட சூழலில் இருப்பதை நான் எப்படிச் சொல்வது? நான் இதைச் சொன்னால் உடனே அரசியலுக்கு வர பயந்துவிட்டேன் என்பார்கள்" என்று கூறினேன். டாக்டர், "உங்களுக்காக நான் வருகிறேன். எந்த மீடியாவுக்கும், ரசிகர்களுக்கும் நான் நான் எடுத்துக் கூறுகிறேன். இதில் பயப்படத் தேவையே இல்லை. உடல்நலம்தான் ரொம்ப முக்கியம். நாம் பொய் எதுவும் சொல்லவில்லையே" என்று கூறினார். அதற்குப் பிறகுதான் நான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தேன்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தனது கட்சியை அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறி இருந்தார். ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் முன் டிசம்பர் 29ஆம் தேதி தனது முடிவிலிருந்து பின்வாங்கினார். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர், “கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. ரசிகர்களும், மக்களும் என்னை மன்னிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

பிறப்பு உறுப்பில் உடைந்த ஊசி... தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்!

click me!