ரஜினி தோளில் கை போட்ட முதல் டிவி ஆங்கர்...! டென்க்ஷனில் ரசிகர்கள்..!

Published : Jan 29, 2020, 02:56 PM IST
ரஜினி தோளில் கை போட்ட முதல் டிவி ஆங்கர்...! டென்க்ஷனில் ரசிகர்கள்..!

சுருக்கம்

டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் இயக்கும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், நடு காட்டில் மாட்டிக்கொண்டால்... கையில் வைத்திருக்கும் பொருட்களை மட்டுமே கொண்டு, சமயோஜிதமாக எப்படி செயல்பட்டு, உயிர் வாழ்வது மற்றும் அங்கிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து விளக்குவார் பியர் கிறில்ஸ்.  

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாரத பிரதமர் மோடி, உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்திருந்தார்.

இதற்காக நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு சென்றார் ரஜினிகாந்த். 2 நாட்கள் தங்கி ரஜினிகாந்த் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்றார். மேலும் முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் சிறு கலக்கத்தை ஏற்பத்தியது. பின் ரஜினிகாந்த் தனக்கு முள் மட்டுமே குத்தியதாகவும், காயம் ஏற்படவில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பியர் கிறில்ஸ் ரஜினியின் தோல் மீது கை போட்டுகொண்டு இருக்கும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரஜினி ரசிகர்கள் பலர், "தலைவரின் தோள் மீது கைபோட்டு புகைப்படம் எடுத்து கொள்ளும் முதல் ஆங்கர் இவர் தான், என சற்று கோவமாக... விமர்சித்து வருகிறார்கள். 

ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத சூப்பர் ஸ்டார்... காட்டில் தன்னை பாதுகாப்பாக வழிநடத்தி சென்ற பியர் கிரில்ஸ்சுக்கு நன்றி தெரிவித்து கூலாக ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்