
ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் லைகா தயாரிப்பில் நவம்பர் 29 அன்று வெளியான 2.0 வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. நான்கு நாட்களில் 400 கோடி (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) 7 நாட்களில் 500 கோடி வசூல் என லைகா நிறுவனம் அறிவித்துவிட்டது. முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்து ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துவிட்டது.
ரஜினியின் இந்த 2.0 ஏழு நாள் முடிவில் சென்னையில் மட்டும் மொத்தமாக ரூ. 13.64 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் எடுத்துக் கொண்டால் படம் ரூ. 55 கோடிக்கு வசூலித்திருக்கிறது.
எப்போதுமே விஜய் அஜித் படங்கள் மட்டுமே மாறி மாறி வசூல் சாதனை நிகழ்த்திவரும் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் முதல்முறையாக தனது படத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
அஜித்-விஜய் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் கோட்டையான குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் புகுந்து ராஜாவாக மாறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. திரையரங்கில் முதல் வார முடிவில் அதிகம் வசூலித்த படங்களில் ரஜினியின் 2.0 நம்பர் 1 இடம் பிடித்துள்ளதாம். இதனை அத்திரையரங்க உரிமையாளரே டுவிட்டரில் போட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.