’ரஜினி குரூப்களில் ‘விஸ்வாசத்துக்கு சப்போர்ட்... வாட்ஸ் அப் அட்மின்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சூப்பர் ஸ்டார்...

By Muthurama LingamFirst Published Jan 8, 2019, 1:02 PM IST
Highlights

இதில் பகிரப்படும் முக்கிய புகார்கள் ரஜினியின் பார்வைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நபர்கள் வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து நீக்கப்படாமல் தொடர்ந்து குரூப்பில் நீடித்து வருவதாக ரஜினிக்கு தகவல் கிடைத்தது.

கட்சி மற்றும் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து உடனே நீக்காவிட்டால் அக்குழுவின் அட்மின்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.

ரஜினி தனது அரசியல் எண்ட்ரி குறித்து அறிவித்த பிறகு அவரது ரசிகர் மன்றக் குழுவினர் ஓவ்வொரு முக்கிய நகரங்களிலும் வாட்ஸ் அப் குரூப் துவங்கி மற்ற அரசியல் கட்சிகள் போலவே இயங்கி வருகின்றனர். இதில் பகிரப்படும் முக்கிய புகார்கள் ரஜினியின் பார்வைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நபர்கள் வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து நீக்கப்படாமல் தொடர்ந்து குரூப்பில் நீடித்து வருவதாக ரஜினிக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், ‘மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ்அப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்க கூடாது. வாட்ஸ்அப் குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும்’ என்று ரஜினி தரப்பிலிருந்து மன்ற குரூப் அட்மின்களுக்கு கறாரான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குரூப்பில் நீடித்துக்கொண்டு பல ரகசியங்களைக் கசிய விடுவதோடு, இந்த குரூப்பில் இருந்துகொண்டே சிலர் ரஜினியை வெறுப்பேற்றும் விதமாக அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு ஆதரவான செய்திகளையும் பகிர்ந்ததால் கடும் கோபமடைந்து  மேற்படி அதிரடியில் இறங்கியிருக்கிறார் ரஜினி என்றும் சொல்லப்படுகிறது.

click me!