
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ரித்திக் ரோஷன் தன்னுடைய தந்தைக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத்தின் சர்ச்சையில் சிக்கி, தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த துவங்கிய ரித்திக் ரோஷன், தற்போது சமூக வலைதள பக்கத்தில் அவருடைய தந்தையும், பிரபல இயக்குனருமான ராகேஷ் ரோஷன் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, தொண்டை வலியால் அவதி பட்டு வந்த அவரை மருத்துவர்கள், முழு பரிசோதனை செய்தபோது அவருக்கு புற்று நோய் உள்ளதை கண்டறிந்ததாகவும். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதை அறிந்தும், இன்று காலை மிகவும் உற்சாகமாக தந்தை ராகேஷ் ரோஷன், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது, தந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ரித்திக் ரோஷன் தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தோடு அவர் பதிவிட்டது, "இது நான் தந்தையுடன் இன்று காலை எடுத்துக்கொள்ளும் புகைப்படம், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனக்கு நன்றாக தெரியும், அவர் இந்த புற்று நோயில் இருந்து கண்டிப்பாக மீண்டு பூரண குணமடைந்து வருவார். இவரை போன்ற ஒருவர் எனக்கு தந்தையாக கிடைக்க நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் தந்தை என்பதையும் தாண்டி அவர் தன்னுடைய வழிகாட்டி என்று குறிப்பிட்டுள்ளார்.
ரித்திக் ரோஷன் வெளியிட்டுள்ள இந்த தகவல் பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.