
ரஜினி எடுத்த அதிரடி முடிவு....! இனி இப்படி தானாம்.....!
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் காலா. காலா படத்தில் அரசியல் சார்ந்த சாயல் அதிகமாகவே இருந்தது..
இதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஆவலும் ரஜினிக்கு இருந்துள்ளது. காரணம் நிஜ வாழ்கையில் ரஜினி தற்போது அரசியலில் குதித்து உள்ளதும் அவர் எப்படி மக்களிடம் அணுகப்போகிறார் என்பதும் தான்...
தூத்துக்குடி பிரச்சனையின் போது, அவர் சொன்ன சமூக விரோதி என்ற வார்த்தை மக்களிடேயே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதற்கு காரணம் பல்வேறு அரசியல் தலைவர்கள் ரஜினியின் வார்த்தையை வேறு விதமாக திணித்து மக்களிடேயே கொண்டு சேர்த்தது தான் என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது
தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறைக்கு காரணமே, கடைசி நேரத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியது தான் என தெரிவித்து இருந்தார் ரஜினி.. ஆனால் சமூக விரோதி யார் என்று கூற வில்லை..ஆனால் இவருடைய கருத்தை பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று விட்டனர் என்றே கூறலாம்
இந்நிலையில் தான் காலா திரைப்படம் வெளியானது. அதில் ஒரு காலாவாக மக்களுக்காக போராடும் ஒரு வீரனாக உள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் நிஜ வாழ்க்கைக்கும் சினி வாழ்க்கைக்கும் முரண்பாடாக இருக்கும் என்பதை உணர்ந்த ரஜினி..இனி "தான் நடிக்கும் படங்களில் அரசியல் இருக்கக் கூடாது என்ற முடிவை எடுத்து உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக ரஜினி டார்ஜிலிங் சென்று உள்ளார்.
இந்த படத்தில் கூட எந்த இடத்திலும் அரசியல் சார்ந்த வசனங்கள் வேண்டாம் என முன்பே தெரிவித்து விட்டாராம் ரஜினி.
இந்த படப்பிடிப்பு முடிந்தபின்னர், தங்களுடைய ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளதாகவும், விரைவில் மாபெரும் மாநாட்டை நடத்தி கட்சி பெயர் அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.