
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியிலும் நடத்தப்பட்டது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த 13 பிரபலங்கள் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவராலும் கவனிக்கப்பட்ட ஜூலி என்கிற பெண் உட்பட 14 பிரபலங்கள் கலந்துக்கொண்டு விளையாடினர்.
ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் வெளியேற்றப்படுவார். மக்கள் ஓட்டுக்களின் அடிப்படையில், வெளியேற்றும் பட்டியலில் இடம்பெற்ற அந்த பிரபலம் காப்பாற்ற படுவாரா? இல்லையா? என்பதை தொகுப்பாளர் கமலஹாசன் முடிவு செய்வார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் வயல் கார்ட் சுற்று மூலமும் ஒரு சில பிரபலங்கள் பாதியில் உள்ளே செல்வார்கள். இவர்களில் யார் மக்கள் மனதை வென்று 100 நாள் முடிவில் பிக்பாஸ் பட்டதை வெல்வார்கள் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இன்று இரவு முதல் ஆரம்பமாக உள்ளது. பலராலும் எதிர்ப்பர்கப்படும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ள பிரபலங்கள் யாராக இருக்கும் என யூகத்தின் அடிப்படையில் பல பிரபலங்கள் பெயர் அடிப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கும் செல்ல உள்ள பிரபலங்களின் ஃபைனல் செய்யப்பட்ட பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபலங்கள் பெயர்:
யாசிகா ஆனந்த்
பொன்னம்பலம்
மஹத்
ஆர்.ஜே. வைஷ்ணவி
டேனியல் போப்
தாடி பாலாஜி
நித்தியா (தாடி பாலாஜி)
ஆனந்த் வைத்தியநாதன்
சாரிக் ஹாசன் (நடிகர் ரியாஸ் கான் மகன்)
ஜனனி ஐயர்
ஐஸ்வர்யா தத்தா
மும்தாஜ்
மம்மதி சாரி
ரித்விக்கா
ரம்யா (NSK)
சென்ராயன்
என மொத்தம் சீசன் 2 வில் 16 பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.