
கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சீசன் நாளை முதல் துவங்க உள்ளது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே துவங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ள பிரபலங்கள் யார்...? யார்..? என ஒரு மாதமாகவே பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் நாளை பிக் பாஸ் வீட்டின் உள்ளே செல்ல உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நாளைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டின் உள்ளே நுழைய உள்ள அந்த 14 பிரபலங்கள்:
1. யாஷிகா ஆனந்த்
2. ஆனந்த் வைத்தியனாதன்
3. தாடி பாலாஜி
4. நித்யா தாடி பாலாஜி
5. ஜனனி ஐயர்
6. டேனியல்
7. பொன்னம்பலம்
8. ஐஸ்வர்யா தத்தா
9. மமதி சாரி
10. மஹத்
11. மும்தாஜ்
12. பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்
13. டேனியல் பாலாஜி
14. பரத்
ஆகிய பிரபலங்கள் தான் உறுதியாக பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் நடைபெற உள்ள இந்த விளையாட்டில் கலந்துக்கொண்டு விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இதிலும் சில மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நல்லவர் யார்...? கெட்டவர் யார்...? என தொகுப்பாளர் கமலஹாசனுடன் சேர்ந்து நாமும் கண்டு பிடிப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.