வேலைக்கார பெண்ணை டார்ச்சர் செய்தனரா ரஜினியும், அவர் குடும்பமும்?: பற்றி எரியும் பெரிய இடத்து பஞ்சாயத்து

By vinoth kumarFirst Published Dec 14, 2018, 1:38 PM IST
Highlights

ரஜினியுடன் பணி புரிந்த எந்த செலிபிரெட்டிகளும் சொல்வது, ‘அவர் ரொம்ப எளிமையான மனிதர். எந்த ஈகோவும் பார்க்க மாட்டார்.’ என்பதுதான். ஆனால் அப்பேர்ப்பட்ட ரஜினியும் மற்றும் குடும்பத்தினரால் மூன்று மணி நேரம் அவர்கள் வீட்டு வேலைக்கார பெண் டார்ச்சருக்கு ஆளானதாக ஒரு பஞ்சாயத்து கலக்கி வருகிறது.

ரஜினியுடன் பணி புரிந்த எந்த செலிபிரெட்டிகளும் சொல்வது, ‘அவர் ரொம்ப எளிமையான மனிதர். எந்த ஈகோவும் பார்க்க மாட்டார்.’ என்பதுதான். ஆனால் அப்பேர்ப்பட்ட ரஜினியும் மற்றும் குடும்பத்தினரால் மூன்று மணி நேரம் அவர்கள் வீட்டு வேலைக்கார பெண் டார்ச்சருக்கு ஆளானதாக ஒரு பஞ்சாயத்து கலக்கி வருகிறது. 

விவகாரம் இதுவே... சமீபத்தில் தன் மனைவி மற்றும் பேரனுடன் சென்னையிலுள்ள ஒரு பெரிய தியேட்டருக்கு 2.0 படம் பார்க்க வந்திருந்தார் ரஜினி. அவரது குடும்பம் அமர்ந்து படம் பார்ப்பதை அப்போது அங்கே படம் பார்க்க வந்திருந்தவர்கள் கவனித்து, போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரலாக்கினர். இதற்கு ஹூர்ரே! லைக்ஸும், கமெண்ட்ஸுகளும் அள்ளின. 

இந்த சூழலில் அந்தப் போட்டோவில் ஒரு பஞ்சாயத்தை கண்டுபிடித்தது ஒரு வில்லங்க மூளை. அதாவது ரஜினி குடும்பத்தினர் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து படம் பார்க்க, பக்கத்திலோ அவர்களது வீட்டு வேலைக்கார பெண்மணி போல் ஒருவர் நின்று கொண்டே இருந்தார். இது தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் எடுத்த போட்டோ, செல்ஃபி மற்று வீடியோவிலும் பதிவாகியிருந்தது. 

படம் துவங்கியது முதல் முடியும் வரை ரஜினி வீட்டு வேலைக்கார பெண் நின்று கொண்டேவா இருந்தார்? என்ற ரீதியில் சிலர் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்ப, அதற்கு சிலர் ‘ஆமா நானும் ரஜினி பேமிலி படம் பார்த்தப்ப அங்கேதான் இருந்தேன். வேலைக்கார பொண்ணை நிற்கவே வெச்சிருந்தாங்க. பக்கத்துல சில சீட்ஸ் காலியா கிடந்தும் கூட, உட்கார சொல்லாமல் கடைசி வரை நிறுத்தியே வெச்சிருந்தாங்க.’ என்று பதில் கமெண்ட்ஸ் போட்டனர். 

இதற்கு, ‘தன் வீட்டுக்காக உழைக்கிற ஒத்த லேடியையே இப்படி மணிக்கணக்கா நிக்க வெச்சு டார்ச்சர் பண்ணியிருக்குது ரஜினியும் அவரது குடும்பமும். இவரெல்லாம் நம்மளை ஆள வந்தால், எந்தளவுக்கு மோசமா நடந்துப்பார்? இவரோட எளிமைத்தனமும், பெருந்தன்மை குணமும் பணமிருக்கிற ஆளுங்ககிட்டதான் போல! பொது இடத்திலேயே வேலைக்கார பொண்ணை இப்படி வறுக்கிற குடும்பம், வீட்டுக்குள்ளே எப்படியெல்லாம் வேலையில டார்ச்சர் கொடுப்பாங்க! ரஜினியோட மனைவி லதாதான் உட்கார சொல்லாட்டாலும், ரஜினியுமா அந்தப் பொண்ணை இப்படி உதாசீனப்படுத்தினார்! இவங்க சந்தோஷமா படம் பார்க்க, ஸ்நாக்ஸ் எடுத்துக் கொடுத்தப்படி அந்தப் பொண்ணு கால் வலிக்க நிற்கணுமா? மனித உரிமை மீறல் மட்டுமல்ல, சமூக பொருளாதார ரீதியில் சக மனிதனை அசிங்கப்படுத்தும் செயல் இது.’ என்று பொரிந்து தள்ளிவிட்டனர். 

ஆனால் அதேவேளையில் ‘அப்படியெல்லாம் யாரையும் ரஜினி குடும்பம் நிற்கவெச்சு டார்ச்சல் செய்யவில்லை. இது வேண்டுமென்றே கிளப்பப்படுகிற ஒரு பொய் குற்றச்சாட்டு.’ என்று சிலர் கமெண்ட்ஸ் போட்டும் எந்த பலனுமில்லை. ரஜினி மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிரான கமெண்ட்ஸுகள் பற்றி எரிந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அதாவது, சில வருடங்களுக்கு முன்பாக சென்னை ஏர்போர்ட்டில் ஒரு என்.ஆர்.ஐ. தமிழ் பெண் தன் கைக்குழந்தையுடன் இமிகிரேசன் பிரிவினரால் தேவையில்லாமல் விசாரணையில் குடைந்து எடுக்கப்பட்டபோது அங்கே பாஸ்போர்ட்டுடன் நின்று  கொண்டிருந்த ரஜினி இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்துவிட்டார். 

 சினிமாவில்தான்  அவதிப்படும் பெண்களுக்கு உதவுவது போல் நடிப்பார்! நிஜத்தில் சாதாரண மனிதர்களை விட மோசமானவர்! என்று ஒரு பரபரப்பு பரவியது. அந்தப் பெண் யார், எந்த நாட்டுக்கு கிளம்புகையில் இப்படி டார்ச்சரை அனுபவித்தார் என்பதையெல்லாம் ஆதாரத்தோடு விரிவாய் எழுதியிருந்தனர். இப்படியான சூழலில்தான் இப்போதும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ரஜினி. இதன் பின்னணியில் உள்ள தெளிவான உண்மை என்ன? என்பதை தியேட்டர்காரர்களும், ரஜினி தரப்பும்தான் ஆதாரத்தோடு வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஹும்! ரஜினி எங்கே சென்றாலும் மூன்றாவது மட்டுமல்ல நான்காவது, ஐந்தாவது கண்கள் அவரை ஃபாலோ செய்து கொண்டேதான் இருக்கின்றன.

click me!