நாங்க நாய் மாதிரி வந்து நிற்கிறோம் ஆனா மேல்மட்ட பணக்காரர்களை மட்டுமே மதிக்கிறார் ரஜினி...!

Published : Dec 11, 2018, 04:00 PM ISTUpdated : Dec 11, 2018, 04:04 PM IST
நாங்க நாய் மாதிரி வந்து நிற்கிறோம் ஆனா மேல்மட்ட பணக்காரர்களை மட்டுமே மதிக்கிறார் ரஜினி...!

சுருக்கம்

அம்பானியும், கலாநிதி மாறனும் என்ன இவருக்கு போஸ்டர் ஒட்டி, கட் -அவுட் கட்டினார்களா? அதை செய்ய தொண்டன் வேண்டும். ஆனால் இவரு மதிக்கிறது மேல் மட்ட நபர்களை மட்டும்தான் இல்லையா?” என்று கேட்டிருக்கிறார்கள். 

பெரிதாய் அரசியல் பேசுவார்! என்று எதிர்பார்க்கப்பட்ட ‘பேட்ட’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில், அரசியல் பற்றி வாயே திறக்கவில்லை ரஜினி. ஆனால் அந்த விழாவில் தன் பேச்சின் இறுதியில் “எனது பிறந்தநாள் 12-ம் தேதி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளன்று நான் இங்கு இருக்க மாட்டேன். அதேபோல் இந்த ஆண்டும் இங்கு இருக்க மாட்டேன்.” என்று கூறினார். 

இதுதான் ரசிகர்களை கடுமையாய் கொதிப்படைய வைத்துள்ளது. அதாவது தனது பிறந்த நாளன்று முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. அதில் கலந்து கொள்ள மும்பை செல்கிறாராம் ரஜினி. அதனால்தான் பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திக்க வீட்டில் இருக்கப்போவதில்லை! என்பதை ‘வழக்கம்போல்’ என்று நாசூக்காய் சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள் என்கிறார்கள். 

கொதிப்படைந்திருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ராகவேந்திரா மண்டபத்துக்கு போன் போட்டு “போன வருஷம் வரைக்கும் தலைவர் வெறும் சினிமா நட்சத்திரம் தான். ஆனா இப்போ அவரு ஒரு அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கார். இன்னும் கொஞ்ச நாள்ல கட்சி துவங்குறார். இப்படிப்பட்ட நேரத்தில் தன் பிறந்தநாளன்னைக்கு வீட்டுல இருக்க மாட்டேன்னு சொல்றது என்ன நியாயம்? அவர் எவ்வளவு எடுத்தெறிஞ்சு பேசினாலும் ரசிகர்கள் நாங்க கண்டுக்கமாட்டோம். நாய் மாதிரி வந்து நிற்போம். 

ஆனால் தொண்டர்களாய் இருக்கிறவனும், அவருக்கு ஓட்டு போட நினைக்கிற பொது மக்களும் இப்படியெல்லாம் நடந்துக்கிறதை பொறுக்க மாட்டாங்க. அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போறார், கலாநிதிமாறன் தயாரிக்கிற தன் படத்தின் இசை வெளியீடு வரைக்கும் வந்து நிற்கிறார். ஆனால் நாங்க ஆசைப்படுற ஒருநாளை எங்களுக்கு ஒதுக்க மாட்டேங்கிறார். நாங்க கேட்கிறோம்... 

அம்பானியும், கலாநிதி மாறனும் என்ன இவருக்கு போஸ்டர் ஒட்டி, கட் -அவுட் கட்டினார்களா? அதை செய்ய தொண்டன் வேண்டும். ஆனால் இவரு மதிக்கிறது மேல் மட்ட நபர்களை மட்டும்தான் இல்லையா?” என்று கேட்டிருக்கிறார்கள். இதற்கு மண்டப நிர்வாகிகளால் பதில் சொல்ல முடியவில்லை. தகவல் அப்படியே ரஜினியின்  காதுகளுக்கு போயிருக்கிறது. அதற்கு....வழக்கம்போல தலைவர் ஒரு சிரிப்பு சிரிச்சார் பாருங்க!....

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!