12.12.2018...நாளை மற்றுமொரு நாளே... எதுவும் அறிவிக்கமாட்டார் ரஜினி 68’

Published : Dec 11, 2018, 03:00 PM IST
12.12.2018...நாளை மற்றுமொரு நாளே... எதுவும் அறிவிக்கமாட்டார் ரஜினி 68’

சுருக்கம்

அரசியல் எண்ட்ரி குறித்து இன்னும் சில காலங்களுக்கு மவுனமாக இருக்கவிரும்பியே ரஜினி‘பேட்ட’ விழாவில் ‘நான் பிறந்தநாளன்று வீட்டில் இருக்கமாட்டேன். கடந்த ஆண்டு போலவே தேவையில்லாமல் வீட்டுக்கு வந்து ஏமாற வேண்டாம்’ என்று அறிவித்தது.

’படிக்காதவன்’படத்தில் விவேக் தனது அசிஸ்டெண்டுகளை நோக்கி ‘இதுவரைக்கும் நான் உங்களுக்கு எதாவது நல்லது பண்ணியிருக்கேனா? என்று கேட்டுவிட்டு, ‘பண்ணலையில்லை.இனியும் அப்பிடித்தான்’ என்பார். அதுபோலவே ரஜினி நாளை வரவிருக்கும் தனது இந்த பிறந்தநாளன்றும் தனது அரசியல் பிரவேசம் குறித்து  எதுவும் அறிவிக்கமாட்டார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

அரசியல் எண்ட்ரி குறித்து இன்னும் சில காலங்களுக்கு மவுனமாக இருக்கவிரும்பியே ரஜினி‘பேட்ட’ விழாவில் ‘நான் பிறந்தநாளன்று வீட்டில் இருக்கமாட்டேன். கடந்த ஆண்டு போலவே தேவையில்லாமல் வீட்டுக்கு வந்து ஏமாற வேண்டாம்’ என்று அறிவித்தது. அதை ஒட்டி வெக்ஸ் ஆன ரசிகர்கள் நம்மை சந்திக்காவிட்டாலும் கூட தலைவர் என்னத்தையாவது கண்டிப்பாக அறிவிப்பார் என்று வழக்கம்போலவே இன்னும் நம்புகிறார்கள்.

இந்நிலையில் ‘நிறைய பேர் சேர்த்து எதிர்த்தா யார் பலசாலி? என்று அவரால் சுட்டிக்காட்டப்பட்ட மோடி 5 மாநிலங்களில் மண்ணைக் கவ்வி இருப்பது அவரை மேலும் அப் செட் ஆக்கியிருக்கும். இந்த சமயத்தில் மீடியாவை சந்தித்தால் அவர்கள் கண்டிப்பாக ‘அந்த 5 மாநிலம்’ என்று மைக்கை நீட்ட ரஜினி ‘எந்த 5 மாநிலம்?’ என்று கேட்கவேண்டி வந்தாலும் வரலாம். எனவே ரஜினியின் நாளைய 68 வது பிறந்த நாள் ‘நாளை மற்றுமொரு நாளே’.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Karuppu vs Drishyam 3 Box Office Collection : கருப்பனிடம் சரண்டர் ஆன ஜார்ஜ்குட்டி... திரிஷ்யம் 3-ஐ விட அதிக வசூலை வாரிசுருட்டிய கருப்பு