
1995ம் ஆண்டு பாட்ஷா படம் வெளியானது. இதையடுத்து அவர் அரசியலில் பிரவேசிப்பார் என பரபரப்பாக பேசப்பட்டது. அவரை, அரசியலுக்கு வரும்படி ரசிகர்கள், வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு கொடுத்தார். இதனால், அவருக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவும் பெருகியது. ஆனாலும், அவர் அரசியலுக்கு வருவதை தவிர்த்து வந்தார்.
இதற்கிடையில், அவருக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், சினிமாவில் நடிப்பதையே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என முடிவு செய்தார். அதன்படி கடந்த 1999ம் ஆண்டு படையப்பா, 2002ல் பாபா, 2005 சந்திரமுகி, 2007 சிவாஜி, 2008 குசேலன், 2010 எந்திரன், 2013 கோச்சடையான் என இடைவெளி விட்டு நடித்து வந்தார்.
பல ஆண்டுகளாக ரசிகர்களை ரஜினி சந்திக்காமல் இருப்பதை, அவருக்கு பலமுறை கடிதம் மூலமும் தங்களது ரசிகர் மன்றம் சார்பிலும் தெரியப்படுத்தினர்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் ரசிகர்களை சந்திப்பதாக ரஜினி அறிவித்தார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு வேலைகள் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. பின்னர், ஒரு நாளைக்கு 4 மாவட்டம் என தனது ரசிகர்களை சந்திக்க ரஜினி முடிவு செய்தார். அதற்கான தேதி பின்னர், அறிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில், தனது ரசிகர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்கி, வரும் 15ம் தேதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்களுக்கு ரசிகர் மன்றத்தின் சார்பில் ஒரு அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. அந்த அட்டையில் அந்தந்த ரசிகரை பற்றிய அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அவர்கள், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நுழைந்தவுடன், அந்த அட்டையை அதிலுள்ள QR Code மூலமாக ஸ்கேன் செய்து அனைத்து தகவல்களையும் பெற்று விடுவார்கள். இந்த சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
இம்முறை தற்காலிகமாக கொடுக்கப்படும் இந்த அட்டை விரைவில் ரசிகர் மன்ற அட்டையாகவே மாற்றிக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.