
சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிய விவேகம் படத்தின் டீசர், 10 மில்லியன் வியூவ்ஸை நெருங்கி வருகிறது.
அஜித்தின் விவேகம் டீஸர் 57 நொடிகள் மட்டுமே ஓடக்கூடியது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான 24 மணி நேரத்தில் 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்ட இந்த டீசர், தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் கபாலி டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் பெற்ற பார்வையை, விவேகம் டீசர் வெறும் 12 மணி நேரத்தில் முறியடித்தது.
10 மில்லியன் பார்வைகளை விவேகம் டீசர் பெறும்போது, அது தமிழ் சினிமா டீசர்களில் புதிய சாதனை பட்டியலில் இடம்பெறும்.
தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள விவேகம் திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது உண்மையானால், அஜித் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் இது என்ற பெருமையை விவேகம் பெறும். மேலும், யூடியூபின் டாப் 10 டிரெண்டிங்கில் விவேகம் 79 லட்சம் பார்வையாளர்களுடன் நம்பர் 1 டிரெண்டிங்கில் இருக்கிறது. டீசர் வெளியாகி கிட்டத்தட்ட 48 மணி நேரங்கள் வரை டிரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது
வேகமாக, விவேகம் இந்த பெருமையை பெற வாழ்த்துகள்…
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.