மருமகனை அடுத்து மாமனாருடன் ஜோடி சேரும் கஜோல்?

 
Published : May 13, 2017, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
மருமகனை அடுத்து மாமனாருடன் ஜோடி சேரும் கஜோல்?

சுருக்கம்

Kajol nest joins with rajinikanth

ரஜினிக்கு சமீபத்தில் வெளியான கபாலி படம் மிக பெரிய வெற்றி அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ரஞ்சித் இந்த கூட்டனி யாரும் எதிர் பார்க்காத வெற்றியை ரஜினிக்கு கொடுத்தது. முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படத்தை அடுத்து ரஜினியை முழுக்க முழுக்க வித்தியாசமாக காண்பித்தவர் என்றால் அது ரஞ்சித் என்று சொல்லலாம். 

மீண்டும் இந்த கூட்டணி இணையுமா என்று எல்லோரும் ஆவலோடு எதிர் பார்த்த நேரத்தில் தனுஷ் மிக பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் விதத்தில் மீண்டும் ரஜினியும் ரஞ்சித் கூட்டணி என் தயாரிப்பில் இணைகிறார்கள் என்றது எல்லோறோம் மிக பெரிய ஆச்சர்யம் மட்டும் இல்லாமல் சந்தோஷத்தை உண்டுபண்ணியது.

இதை விட மிக பெரிய சந்தோசம் என்ன வென்றால் ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை காஜோல் நடிக்க இருகிறாராம்.

ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தார் கஜோல். அதன்பிறகு, பாலிவுட்டிலேயே செட்டிலாகி விட்டார். தற்போது, 20 வருடங்கள் கழித்து தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் மூலம் மறுபடியும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் கஜோலின் நடிப்பைப் பார்த்து, ‘ஆஹா… ஓஹோ…’ எனப் புகழ்ந்துள்ளார் தனுஷ். இந்நிலையில், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு நாயகி இன்னும் செட்டாகவில்லை. வித்யா பாலன் கால்ஷீட் இல்லாததால் நடிக்க மறுக்க, வேறொரு பாலிவுட் நடிகையைத் தேடிவந்தனர். 

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷுக்கு, நம் படத்தில் நடித்த கஜோலை ரஜினிக்கு ஜோடியாக்கினால் என்ன என்று தோன்றியிருக்கிறது. இதை அவர் ரஜினியிடமும், பா.இரஞ்சித்திடமும் கூற, அவர்களுக்கும் சம்மதம் என்றே தெரிகிறது. இருந்தாலும், ஸ்கிரீன் டெஸ்ட்டுக்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்றிருக்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!