கருணாநிதியுடன் ரஜினி திடீர் சந்திப்பால்  பரபரப்பு.....!!!

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 10:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
கருணாநிதியுடன் ரஜினி திடீர் சந்திப்பால்  பரபரப்பு.....!!!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தி.மு.க தலைவர் கருணாநிதியை இன்று கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த ஒன்றரை மாதமாக உடல் நலம் பாதித்து வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதி திடீரென உடல் நலம் பாதித்ததால் ஆழவார் பேட்டை காவேரி  மருத்துமனையில் அனுமதிக்கபட்டார்.

அங்கு ஒரு வாரம்  மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். அவரை ஸ்டாலின் , கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இவர்கள் , சந்திப்பு திடீரென நிகழ்ந்துள்ளதால் அரசியல் சம்பந்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தாம்  கருணாநிதியை  சந்தித்தது  அவரை பார்த்து உடல் நலம் பற்றி விசாரிக்க தான் என கூறியுள்ளார் . அதே போல் கருணாநிதியை இன்று கவிஞர் வைரமுத்துவும் சந்தித்து நலம் விசாரித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!