ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் நாளை அஞ்சலி - முன்னணி நடிகர்கள் பங்கேற்பு

Asianet News Tamil  
Published : Dec 10, 2016, 03:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் நாளை அஞ்சலி - முன்னணி நடிகர்கள் பங்கேற்பு

சுருக்கம்

மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நாளை அஞ்சலி செலுத்தப்பட உள்ளது . இதில் திரையுலகின் முன்னணி நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
நடிகர் சங்கத்தின் மரகத மணியாக திகழந்த அம்மா என்று மக்கள் தங்கள் மனதில் வைத்து பூஜிக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய கலையுலக சகோதரி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நம்மை மீளா துயரில் நம்மை தவிக்கவிட்டு சென்று இருக்கிறார்.


 அன்னாருடைய ஆத்மா சாந்தி அடையவும் , அவர்தன் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் பெருமைகளை பதிவுசெய்யவும் தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. 
கலைக்காகவும் , பொது பணிக்காகவும் தம் வாழ்வனைத்தும் அர்பணித்த அவ்வாத்மாவிற்கு அஞ்சலி செலுத்த நடிகர் சங்க உறுப்பினர்கள் , உறுப்பினர் அல்லாத நடிகர்கள் , திரையுலக ஜாம்பாவான்கள் என  அனைவரும் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்