
சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியாக வசித்து வந்த துணை நடிகை ஜெயா கொலை செய்யப்பட்டு அலங்கோலமாக கிடந்தார்.
இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் அடைந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதனால் ஜெயா வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த காவல்துறையினர் சம்பவம் நடந்த அன்று ஒரு ஆட்டோவில் இருந்து இருவர் இறங்கி ஜெயாவின் வீட்டின் உள்ளே சென்றதை கண்டுபிடித்தனர்.
பின்னர் ஆட்டோ நம்பரை வைத்து விசாரணை செய்ததில் சம்பவத்தன்று ஜெயா வீட்டிற்கு சென்றது அவரது தோழி அசினா மற்றும் ஆட்டோ உரிமையாளர் சிராஜூதின் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இருவரையும் கைது செய்து விசாரித்தபோது அவர் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சினிமாவில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் ஆண் நண்பர்களை அழைத்து உல்லாசமாக இருந்து அதில் கிடைக்கும் வருமானத்தில் இருவரும் வாழ்க்கையை நடத்தியதாக அசினா குறிப்பிடுள்ளார்.
இந்த வருமானத்தை பங்குபோடுவதில் தகறாரு ஏற்பட்டதால் தனது காதலன் சிராஜூதின் உதவியுடன் ஜெயாவை கொலை செய்ததாக அசினா ஒப்புக்கொண்டுள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.