’முதல்ல நம்ம மன்றத்துக்கு ஒரு பூட்டு வாங்கிப் பூட்டுங்க’...அடிதடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி...

Published : Aug 09, 2019, 12:19 PM IST
’முதல்ல நம்ம மன்றத்துக்கு ஒரு பூட்டு வாங்கிப் பூட்டுங்க’...அடிதடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி...

சுருக்கம்

கோவை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட அடிதடி கட்டப்பஞ்சாயத்துகள் ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு வரப்ப்பட்ட நிலையில், அவர் உடனே மன்றத்துக்குப் பூட்டுப்போட சொன்ன செய்தி ஒட்டுமொத்த மன்றத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

கோவை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட அடிதடி கட்டப்பஞ்சாயத்துகள் ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு வரப்ப்பட்ட நிலையில், அவர் உடனே மன்றத்துக்குப் பூட்டுப்போட சொன்ன செய்தி ஒட்டுமொத்த மன்றத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

’பேட்ட’ திரைப்படம் வெளியீட்டின் போது ரசிகர் மன்றக் காட்சிக்காக பெறப்பட்ட டிக்கெட்டுகளை, ரஜினி மக்கள் மன்றத்தின் கோவை மாவட்ட செயலாளராக உள்ள கதிர்வேல் என்பவர், வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக பட ரிலீஸ் சமயத்தில் புகார் எழுந்தது.இது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் கதிர்வேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்அடிதடி வரை சென்றது. அந்த மோதல் தலைமை நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டு பஞ்சாயத்து நடத்தி சமாதானம் செய்து வைத்த பிறகும் அவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

இச்செய்தி ஒரு கட்டத்தில் ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவே சென்னையிலுள்ள தலைமை நிர்வாகிகளை அழைத்துக் கண்டித்திருக்கிறார். இதன் காரணமாக சென்னை தலைமை நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2 நாட்களாக, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கோவை மாவட்டத்தின் ரஜினி மக்கள் மன்ற தலைமை அலுவலகத்திற்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது. தற்போது மன்றம் பூட்டுப்போடப்பட்ட புகைப்படம் வலைதளங்களில் வைரலாகிவருவதால் ஒட்டுமொத்த மன்ற நிர்வாகிகளும் அப்செட்டாகியுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஹாலிவுட் லெஜண்ட் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த தரமான சம்பவம்... 'தி ஒடிஸி' டிரெய்லர் இதோ
பாதியிலேயே நின்ற 'ஹாப்பி எண்டிங்': ஆர்.ஜே. பாலாஜி எடுத்த அதிரடி முடிவு! என்ன ஆனது அந்த படம்?