
பிக்பாஸ் வீட்டுக்குள் நேற்றைய தினம், வயல் கார்டு, சுற்று மூலம் உள்ளே நுழைந்தவர் நடிகை கஸ்தூரி. முதல் நாளிலேயே அனைத்து போட்டியாளர்களுக்கும் வித்தியாசமான தண்டனை கொடுத்து வீட்டையே ரணகளம் செய்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து நாளுக்கு நாள் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டை எப்படி எல்லாம் ஆட்டி வைக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோவில், ஒரே கேள்வி மூலம் கவினை அசிங்கப்படுத்தியுள்ளார் கஸ்தூரி. இந்த புரோமோவில் சேரன், மது, கஸ்தூரி, கவின் ஆகியோர் அமர்ந்து பேசும் காட்சி காட்டப்படுகிறது.
அப்போது கஸ்தூரி கவினை பார்த்து, ஒரே நேரத்தில் நான்கு பெண்களை லவ் பண்றது ஒரு காமெடி உங்களுக்கு தோனி இருக்கலாம் எனக் கூறுகிறார், இதற்கு சேரன் இது காமெடி அல்ல எதிர்பார்ப்பு என்பதுபோல் கூற, இதற்கு கஸ்தூரி எதிர்பார்ப்பு ஜேம்ஸ்பாண்ட் அளவிற்கு இருக்கிறது. ஆனால் ரியாலிட்டி வடிவேலு போல் ஆகிவிட்டது என கிண்டல் செய்து சிரிக்கிறார்.
பின் இதுவே வந்து ஒரு பெண் எல்லார்கிட்டயும் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தால் அது காமெடி ஆகி இருக்குமா? அதுவும் உங்க மைண்டில் அது காமெடியாக இருந்து இருக்குமா என கேட்க. சிரித்துக் கொண்டிருந்த கவின் முகம் மாறுவது இந்த ப்ரோமோவில் பார்க்க முடிகிறது. இன்னும் என்னவெல்லாம் செய்வார் கஸ்தூரி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.