ரஜினி போற போக்கைப் பார்த்தால், இப்போதைக்கு மட்டுமில்லை எப்போதைக்குமே கட்சியை துவங்க மாட்டார் போலத்தான் இருக்கிறது. காரணம்? அடுத்தடுத்து மனுஷன் படங்களில் கமிட் ஆகிக் கொண்டே இருக்கிறார். அண்ணாத்த!வுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதன் பிறகு தான் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளின் படி கே.எஸ்.ரவிக்குமாரோடும் ஒரு படம் பண்ணுகிறார்! அதன் பிறகே அரசியல்! என்கிறார்கள். (அப்ப 2026ல் கட்சி துவக்கி, கண்டிப்பா முதல்வராகுறார் ரஜினி!ன்னு சொல்லுங்கோ)
* விஜய்யின் புது படத்தை விட, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாதான் ஹாட் ஹைலைட்டே. மனுஷன் ஏதாச்சும் வெப்பமா பேசி, அவனவனை வீங்க வெச்சிடுவார். வழக்கமா பெரிய அரங்கங்களில், கல்லூரிகளில் நடந்துட்டு இருந்த அவரின் பட இசைவெளியீட்டு விழா இந்த முறை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கிறதாம். தனக்கு எதிராக சமீபத்தில் நடந்த பாய்ச்சல்களுக்கு இந்த மேடையில் வெச்சு வெளுத்து வாங்கும் முடிவிலிருக்கிறாராம் மாஸ்டர்.
(ஆக்சுவலா மாஸ்டர்லாம் அடிச்சு துவைக்கணுமே)
* நாம் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் இந்தியன் -2 படத்திற்கு தொடர்ந்து வரும் நெருக்கடிகளும், அபசகுனங்களும் தயாரிப்பு தரப்பான லைக்காவையும், இயக்குநரான ஷங்கரையும் ரொம்பவே ஆட்டிப் படைக்கின்றன. கமல் தன்னை ஒரு பகுத்தறிவு மனிதர் என்று கூறிக் கொள்வதால் அவர் இதை வேறு கோணத்தில்தான் பார்க்கிறார். ஆனால் தயாரிப்பாளர் சுபாஷ்கரனும், ஷங்கரும் சமீபத்தில் மிக முக்கியமான ஒரு ஜோஸியரிடம் சென்று ஜாதகம் பார்த்திருக்கிறார்கள். அவர் உத்தரவின்படி பட ஷூட் தள்ளிப்போகிறது, அதேபோல் வேறு சில மாற்றங்களும் நிகழலாமாம்.
(பணிக்கர் சொன்னார்ன்னு கமலையே மாத்திடாதீங்க சாமி!)
undefined
* பாகுபலி , பாகுபலி 2 எனும் மரண மாஸ் ஹிட் படங்களின் இயக்குநரான ராஜமவுலி, அடுத்து ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரை வைத்து ‘ஆர் ஆர் ஆர்’ எனும் படத்தை இயக்குவது தெரிந்த கதையே. இப்படத்தின் பட்ஜெட் வெறும் இருநூற்றைம்பது கோடி தான். தயாரிப்பு தரப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்குக்கும் மேல் விலை வைத்து விற்க நினைத்தார்களாம். ஆனால் இயக்குநரான மவுலியோ ‘நானூறு சி யை தாண்டக்கூடாது’என்று ஸ்டாண்டிங் உத்தரவு போட்டுவிட்டாராம். (இங்குள்ள இயக்குநர்கள் கேட்டுக்கங்கப்பா)
* ரஜினி போற போக்கைப் பார்த்தால், இப்போதைக்கு மட்டுமில்லை எப்போதைக்குமே கட்சியை துவங்க மாட்டார் போலத்தான் இருக்கிறது. காரணம்? அடுத்தடுத்து மனுஷன் படங்களில் கமிட் ஆகிக் கொண்டே இருக்கிறார். அண்ணாத்த!வுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதன் பிறகு தான் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளின் படி கே.எஸ்.ரவிக்குமாரோடும் ஒரு படம் பண்ணுகிறார்! அதன் பிறகே அரசியல்! என்கிறார்கள். (அப்ப 2026ல் கட்சி துவக்கி, கண்டிப்பா முதல்வராகுறார் ரஜினி!ன்னு சொல்லுங்கோ)