ரஜினியும் இளையராஜாவும் மீண்டும் இணைகின்றனர் என்று ஏஸியா நெட் தமிழ்தான் சில வாரங்களுக்கு முன் ஒரு ஸ்கூப்பை வெளியிட்டது. இதோ இப்போது பல மீடியாக்கள் அதை உறுதிப்படுத்த துவங்கியுள்ளன
மலையாள சினிமாக்களின் க்ரைம் கதைகள் நம் முதுகெலும்பை சில்லிட வைக்கும். அதேப்போன்று ரியலாய் நகர்ந்து கொண்டிருக்கிறது நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நடிகர் திலிப்பின் தலை உருட்டப்படும் விவகாரம். அந்த கடத்தலுக்கு ஆர்டர் போட்டவரே அவர்தான்! என ஒரு தரப்பால் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸை கொல்ல திட்டமிட்டார்! என திலீப் மீது சொல்லப்பட்ட புகார்களெல்லாம் கண்ணை கட்ட வைத்தன. ஆனால் இன்று அவ்வழக்கின் போக்கில் கைது செய்யப்படாமல் இருக்க அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டதால் திலீப் செம்ம மகிழ்ச்சி.
( அடுத்த எபிஸோட் எப்போ சேட்டாஸ்?)
பாலிவுட் ஹீரோயின்கள் தென்னிந்திய ஹீரோக்களை பெரிதாய் புகழமாட்டார்கள். ஆனால் அந்த காலம் மலையேறிவிட்டது. ஆர் ஆர் ஆர் பட ஹீரோயின் ஆலியா பட், ராம்சரண மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்.ரை புகழ்ந்து தள்ளிட, இப்போது தீபிகாவோ பிரபாஸை புகழ்ந்து கொண்டிருக்கிறார்.
’ரஜினி நடிக்க, இளையராஜா இசைக்க’ என்று ஏஸியா நெட் தமிழ்தான் சில வாரங்களுக்கு முன் ஒரு ஸ்கூப்பை வெளியிட்டது. இதோ இப்போது பல மீடியாக்கள் அதை உறுதிப்படுத்த துவங்கியுள்ளன. வெற்றிமாறன் இயக்குகிறார் ரஜினியின் அந்த படத்தை, இசை ராஜாவேதான், தயாரிப்பு – தாணு என்கிறார்கள்.
(மறுபடியும் ஒரு ராக்கம்மா கைய தட்டு கொடுங்க ராஜா சார், சும்மா தெறிக்கவிடணும். )
பீஸ்ட் ஃபுல் ஆல்பம் ரெடி! தீம் மியூஸிக் செம்ம ஆஸம்மாக வந்திருக்கிறது – விஜய் செம்ம ஹேப்பி! என்று முதன் முதலில் ஸ்கூப்பை வெளியிட்டது ஏஸியா நெட் தமிழ்!தான். நாம் சொன்னபடியே இதோ ஆல்பம் பாக்ஸை திறக்க துவங்கிவிட்டார்கள். அதில் முதல் சிங்கிளாக! அனிருத் இசைக்க, சிவகார்த்தி எழுதியிருக்கும் அரபிக் குத்து ! பாட்டின் ப்ரமோ வீடியோ இன்று வெளியாகி அல்லு தெறித்துக் கொண்டிருக்கிறது.
(அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் வைபரேஷனுக்கு செக் வைக்கணும் அதானே உங்க ஆச?)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் சர்ப்பரைஸ் காதல், தனுஷுடன் செம்ம சர்ப்பரைஸ் திருமணத்தில் முடிந்து இரு மகன்களுடன் செமத்தியாக போய்க் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் பிரிவை அறிவித்தனர். இந்நிலையில் காதலர் தினத்துக்காக இசை ஆல்பம் ஒன்றை தயார் பண்ணிக் கொண்டிருகிறார். பிப்ரவரி 14க்கு முன் ஆல்பம் ரிலீஸாம்.
(அதே நாள்ள மறுபடியும் தனுஷ் கூட சேர்ந்து, செம்ம சர்ப்பரைஸ் கொடுப்பீங்களோ?)
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.