இப்போதைக்கு அரசியல் பிரவேசம் இல்லை... சன் பிக்சர்சிடம் அட்வான்ஸ் வாங்கிய ரஜினி..!

Published : Jul 30, 2019, 10:20 AM IST
இப்போதைக்கு அரசியல் பிரவேசம் இல்லை... சன் பிக்சர்சிடம் அட்வான்ஸ் வாங்கிய ரஜினி..!

சுருக்கம்

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அறிவிக்கப்பட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியும் அரசியல் கட்சி குறித்த தகவல் இல்லை. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்று தர்பார் படத்தின் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னர் கூறிவிட்டு சென்றார் ரஜினி. இதனை அடுத்து தர்பார் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்று கூறினார்கள்.

 

தர்பார் படம் வெளியான பிறகு ரஜினி முழு நேர அரசியல்வாதி ஆகிவிடுவார் என்றும் பேசினார்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் மீண்டும் தீவிரமானது. அரசியல் தொடர்புடைய பலர் ரஜினியை சந்தித்து பேசி வந்தனர். இந்த நிலையில் சிறுத்தை சிவா ஒரு மாதத்திற்கு முன்னர் ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்தித்து வந்தார். அப்போது ரஜினி அடுத்ததாக சிறுத்தை சிவா படத்தில் நடிக்க உள்ளதாக கூறினார்கள்.

  

ஆனால், சிறுத்தை சிவா ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்து விஸ்வாசம் வெற்றிக்கு ஆசி பெற்றதாக ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பின் போது ரஜினிக்கு ஒரு அருமையான கதையின் ஒன்லைனை மட்டும் சிறுத்தை சிவா கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது அதில் ரஜினி ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். ஆனால் அதே கதையை சன் பிக்சர்சிடமும் சிறுத்தை சிவா கூறியதாகவும் இதனை கேட்ட கலாநிதி மாறனே ரஜினியிடம் பேசியதாக சொல்கிறார்கள். 

இதனையடுத்து ரஜினிக்கு ஒரு தொகை அட்வான்சாகா கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் சிவாவும் கதையை ரெடி பண்ண ஆரம்பித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். விரைவில் சன் பிக்சர்ஸ் ரஜினி – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 6 மாதத்தில் படத்தை முடித்து வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் தர்பார் வெளியானலும் கூட ரஜினி சூட்டிங்கில் தான் பிசியாக இருப்பார் என்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!