இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, திரைக்கு வர உள்ளது காலா திரைப்படம். இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷின் உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கபாலி படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் மீண்டும் ரஜினி நடித்திருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் டீசரும் ஒரு பாடலும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.
இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கிடையே காலா திரைப்படத்தின் 9 பாடல்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த லிங்க்கை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Here we go wunderbar films presents Superstar’s #kaala Tamil Audio .. a @Music_Santhosh musical. Hope you all enjoy it. https://t.co/TGDspMpSsW pic.twitter.com/YL1UIyhvv5
— Dhanush (@dhanushkraja) May 9, 2018

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளின் ஆடியோ பாடல் பதிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் தனுஷ். இந்த பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.