தலைவர் மாஸ் ரிட்டர்ன்ஸ்! ரஜினியின் கஷ்டமும், சன் பிக்சர்ஸ் கணக்கும்..! பரபர பின்னணி

Published : Feb 10, 2022, 07:54 PM ISTUpdated : Feb 10, 2022, 07:56 PM IST
தலைவர் மாஸ் ரிட்டர்ன்ஸ்! ரஜினியின் கஷ்டமும், சன் பிக்சர்ஸ் கணக்கும்..! பரபர பின்னணி

சுருக்கம்

இன்ச் பை இன்ச் அள்ளும் இந்த அறிவிப்பு வீடியோ அடுத்த சில நொடிகளில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் ஃப்ரீஸ் ஆக வைத்துள்ளது

“நான் யானை இல்லை! விழுந்தா எழுந்திருக்க முடியாம கிடக்குறதுக்கு. நான் குதிர மா, விழுந்த அடுத்த செகண்ட் துள்ளி எழுந்து ஓடிட்டே இருப்பேன்.”- பாபா தோல்வியின் போது ரஜினிகாந்த் சொன்ன அந்த டயலாக் இதோ இருபது வருடங்களுக்கு மேலாகியும் அவருக்கு அவ்ளோ அம்சமாக பொருந்திப் போகிறது. தன் புதிய பட ப்ராஜெக்டை சத்தமே இல்லாமல் சடாரென அறிவித்து விஜய், அஜித் என எல்லோருடைய வைபரேஷன்களையும் தூக்கிப் போட்டு துவம்சம் பண்ணிவிட்டார் ரஜினி.

‘எந்த இடத்துல தோற்றோமோ, அதே இடத்துல ஜெயிக்கணும்.’ என்று அடிக்கடி சொல்வார் ரஜினி. அண்ணாத்த! படம் என்னதான் வசூலில் வெற்றி என்று தயாரிப்பு தரப்பும், சிறப்பான படைப்பு! என்று ரஜினியும், எனக்கு முழு திருப்தி! என்று இயக்குநர் சிவாவும் சொல்லி வந்தாலும் கூட அப்படத்தின் மீது அதிகப்படியான எதிர்மறை விமர்சனங்கள் இருப்பது உண்மையே. அதை நன்கு புரிந்து வைத்திருந்தார் ரஜினி! தயாரிப்பு சானலின் மெகா சீரியல் போல் அப்படத்தின் பல ஸீன்கள் இருக்கின்றன! என்று விமர்சனங்கள் வந்து விழ, ரஜினிக்காக பெரிதாய் ஃபீல் பண்ணியது தயாரிப்பு தரப்பு.

இந்த நிலையில்தான் ரஜினியின் அடுத்த படம் லோகேஷ் கனகராஜோடா? நெல்சன் திலீப் குமாரோடா? என்று சில இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருந்தன. சட்டென்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்கள் தயாரிப்பில் இப்போது விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நெல்சன் இயக்கத்தில் ரஜினியை வைத்து ஒரு ப்ராஜெக்ட்க்கு திட்டமிட்டது. காரணம், பீஸ்ட்டின் மேக்கிங்கில் நெல்சன் மிரட்டியிருப்பதை மினி ரஷ் போட்டுப் பார்த்த தயாரிப்பு தரப்பு டபுள் ஹேப்பியானதன் விளைவு இது.

ரஜினி ப்ராஜெக்ட்டிற்காக நெல்சன் சொன்ன கதையும் சன் பிக்சர்ஸுக்கு  பிடித்துப் போனது. உடனே ரஜினியிடம் நெல்சனை அனுப்பி கதை சொல்ல சொன்னார்கள். அவருக்கும் டபுள் ஓ.கே.  அடுத்தடுத்து ஃபார்மாலிட்டிகள் சைலண்டாக முன்னேறின. அப்படத்தின் ப்ரைம் க்ரூ தயாரனது. நெல்சன் இயக்கம் என்றாலே இசை அனிருத்தான். அவர் டிக் ஆனதும், பட அறிவிப்புக்கான ப்ரமோ ஷூட் ஒன்றை தயார் செய்தார்கள். நெல்சனின் படங்கள் கேஷுவலாக ஆரம்பித்து, மெல்ல சூடு பிடித்து, பின் பக்காவாக டேக் ஆஃப் ஆகும். அதேப்போல் இந்த அறிவிப்பு ப்ரமோவும் திட்டமிடப்பட்டது. எல்லாவற்றையும் செம்ம சைலண்டாக வைத்து ப்ரமோ ஷூட் பண்ணினர். ரஜினிக்கு பிடித்த கருப்பு நிற தீமிலேயே ஷூட் தயார் செய்தனர்.

மாஸ் இசையில் அனிருத், நெல்சன் என்று அறிமுகமாக க்ளோசப்பிலிருந்து அப்படியே வொய்டு ஆங்கிளுக்கு கேமெரா மாறுகைய்ல் சட்டென்று ஃப்ரேமுக்குள் வருகிறது கூலர்ஸ் தாங்கிய கரமொன்று. அடுத்த நொடியில் அசத்தல் சேரில் ஆஸமாக அமர்ந்திருக்கும் செம்ம ஸ்டைலியான ரஜினியின் ஸில் அவுட் தெரிய, பின் வெளிச்சம் விழுந்தால் பளீரென சிரித்துவிட்டு, பின் தனது காலை தூக்கி மாஸ் ஸ்டைலாக போட்டு தலையை சாய்த்து சிரிக்கிறார் ரஜினி.

இந்த வீடியோவில், சமீபத்திய பர்ஷனல் கவலை ரேகைகள் எதுவுமில்லாமல் ஃப்ரெஷ்ஷாக சிரிக்கும் ரஜினி சற்றே யூத்தாக இருக்கிறார். கறுபு நிற முடி, வெள்ளை தாடி என்று  மிடில் வயது மனிதராக ஈர்க்கிறார். ‘காலா லுக்’ என்று சிலர் கமெண்ட் அடித்தாலும் கூட மாஸாகதான் இருக்கிறது இந்த லுக். அநேகமாக அல்லு தெறிக்கும் ஆக்‌ஷன் படமாகதான் இது உருவாக வாய்ப்புள்ளது! என்கின்றனர் இப்போதே.

 

இன்ச் பை இன்ச் அள்ளும் இந்த அறிவிப்பு வீடியோ அடுத்த சில நொடிகளில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் ஃப்ரீஸ் ஆக வைத்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி 14-ல் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் வைபரேஷன், பிப்ரவரி 24-ல் அஜித்தின் ‘வலிமை’ படம் ரிலீஸாகும் வைபரேஷன் என எல்லாத்தையுமே சில நிமிடங்களில் அடித்து தூக்கி சாப்பிட்டு துவம்சம் செய்து கொண்டிருக்கிறது ரஜினியின் ‘தலைவர் 169’ வீடியோ. இதில் விஜய் படத்தின்  தயாரிப்பும் சன் பிக்சர்ஸ் என்பதுதான் ஹைலைட்டே.

ஆக தலைவர் களமிறங்குவதால் தரமான சம்பவங்கள் ஸ்டார்ட் ஆகின்றன.

டாட்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!