
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதிமுறைகளில் ஒன்று பகல் நேரங்களில் தூங்க கூடாது என்பது, ஆனால் இந்த விதியை மதிக்காமல் நடந்து கொள்பவர் ரைசா. இவரை தூங்க வேண்டாம் என கூறி பல முறை வீட்டின் தலைவர் மற்றும் ரைசாவையும் அழைத்து பிக் பாஸ் வார்னிங் கொடுத்ததும் மீண்டும் மீண்டும் அவர் தூங்கி கொண்டு தான் இருக்கிறார்.
இந்நிலையில் அவர் இந்த விதியை மதிக்காததால் வீட்டில் உள்ள அனைத்து முட்டைகளையும் எடுத்து செல்ல பிக் பாஸ் ஒருவரை அனுப்புகிறார். அவரும் அனைத்து முட்டைகளையும் எடுத்து சென்றுவிடுகிறார்.
மேலும் ரைசா ஏன் பகல் நேரத்தில் தூங்குகிறார் என்கிற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என பிக் பாஸ்ஸிடம் இருந்து ஒரு கடிதமும் வருகிறது.
ஆனால் ரைசா வெளியில் இருப்பவர்களிடம் தூங்கும் காரணத்தை கூற மறுக்கிறார் பின் பிக் பாஸ்ஸிடம் சென்று நான் ஏன் அவர்களிடம் இது குறித்து கூற வேண்டும் என வாக்குவாதம் செய்கிறார். பின் நான் அழுதாள் முட்டையை திருப்பி கொடுத்து விடுவீர்களா என்றும் தனக்கு இந்த விதியை பற்றி யாரும் கூறவில்லை என்றும் தெரிவிக்கிறார். ஒரு நிலையில் பிக் பாஸ் கடுப்பாகி ரைசாவிடம் ஆங்கிலத்தில் பேசுகிறது. எடுத்து செல்லப் பட்ட முட்டைகள் திரும்ப கொடுக்கப்படுமா...? அல்லது போட்டியாளர்கள் கோபத்திற்கு ரைசா ஆளாவாரா...? இன்று தான் தெரியவரும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.