விஜய் தன் மாமனாரையும் பினாமியாக்கினாரா?: தளபதியின் இமேஜை வரிவரியா உரிச்செடுக்கும் வ.வ. ரெய்டு!

Published : Feb 11, 2020, 06:00 PM IST
விஜய் தன் மாமனாரையும் பினாமியாக்கினாரா?:  தளபதியின் இமேஜை வரிவரியா உரிச்செடுக்கும் வ.வ. ரெய்டு!

சுருக்கம்

விஜய்யே சொன்னது போல் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டு காலம் பெரும் கஷ்டப்பட்டு, உயிரைக் கொடுத்து ஆடி, சண்டையிட்டு இவ்வளவு சம்பாத்தியத்தையும், சொத்துக்களையும் அவர் சேர்த்திருக்கிறார். ஆனால், அவை அனைத்தையும் தன்  பெயர் மற்றும் மனைவி சங்கீதா, பிள்ளைகள் ஜாசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா பெயரில் மட்டும் எழுதி வைக்கவில்லை. சரி தன் அப்பா சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபாவின் பெயரில் எழுதி வைத்திருகிறாரா என்றால் அதுவும் இல்லை. 

விஜய்யின் இமேஜை வெறித்தனமாக சிதைக்க நினைத்து நடத்தப்பட்டு இருக்கிறது அவர் மீதான வருமான வரித்துறை ரெய்டு! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றியில் முடிந்ததா இல்லை விஜய்யின் இமேஜை பல மடங்கு அதிகரித்துவிட்டதா? என்கிற பட்டிமன்றம்தான் இப்போது தமிழக மற்றும் மத்திய ஆளுங்கட்சி அரங்கினுள் நடக்கும் காரசார விவாதம். நடிகர் விஜய் மீதான ரெய்டுக்கு வெறுமனே ‘பிகில் படத்தின் பெத்த வியாபாரம் மட்டுமே காரணம் லேது! ஸ்கிரீனுக்கு பின்னாடி பெத்த பாலிடிக்ஸ் ரீசனும் இருக்குது!’ என்கிறார்கள்  விபரமறிந்தவர்கள். ஆனால் கிணறு தோண்ட போயி, நிலநடுக்கம் வந்த கதையாக இந்த ரெய்டின் மூலம் விஜய்யின் இன்னொரு முகமும் தெரிய வந்திருக்கிறது! என்று வருமான வரித்துறையினரே போட்டுத் தாக்குவதுதான் பொட்டிஃபுல் மேட்டர். 


அது என்ன நில நடுக்கம்!?...எனும் கேள்விக்கு பதில் சொல்லும்  உளவுத்துறை அதிகாரி ஒருவர் ”அதாவது  விஜய்யே சொன்னது போல் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டு காலம் பெரும் கஷ்டப்பட்டு, உயிரைக் கொடுத்து ஆடி, சண்டையிட்டு இவ்வளவு சம்பாத்தியத்தையும், சொத்துக்களையும் அவர் சேர்த்திருக்கிறார். ஆனால், அவை அனைத்தையும் தன்  பெயர் மற்றும் மனைவி சங்கீதா, பிள்ளைகள் ஜாசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா பெயரில் மட்டும் எழுதி வைக்கவில்லை. சரி தன் அப்பா சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபாவின் பெயரில் எழுதி வைத்திருகிறாரா என்றால் அதுவும் இல்லை. மனைவி சங்கீதாவின் பெயரில் அதிக சொத்துக்களும், அவரது அப்பாவான தன் மாமனா சொர்ணலிங்கத்தின் பெயரிலும் ஏக மதிப்பு மிக்க சொத்துக்களை பதிவு செய்து வைத்துள்ளார் விஜய். ஜூவல்லரி, கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி, சூப்பர் மார்க்கெட் என்று இந்தியாவிலும், சொர்ணலிங்கத்தின் சொந்த  ஊரான லண்டனிலும், துபாய் மற்றும் மலேசியாவிலும் வாங்கிப் போட்டிருக்கிறார் விஜய். 


இதன் மூலம் விஜய், தன் மாமனாரை தன் பினாமியாகவே மாற்றியிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.” என்றார்களாம். இந்த தகவல் பிரபல அரசியல் புலனாய்வு இதழ் ஒன்றில் வெளிவந்திருக்கிறது. மேலும், தன் இமேஜை டேமேஜ் செய்துவிட வேண்டாம், வருமான வரித்துறைக்கு எவ்வளவு வரி கட்டணுமோ அதை தான் கட்டிவிடுவதாகவும் விஜய், அந்த காரினுள் கதறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹும், மெர்சலா தெறிக்கவிட்டு பிகில் கெளப்பும் மாஸ்டர் தளபதிக்கே இந்த நிலைமையா?

டெல்லியில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்..! அதிகமுறை ஆட்சியமைத்த கட்சிக்கு நேரும் அவமானம்..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்