விறுவிறுப்பான தேடுதல் வேட்டை - ரிலீஸ் தேதியோடு வெளியான 'ரெய்டு 2' ட்ரைலர்!

Published : Apr 08, 2025, 03:09 PM IST
விறுவிறுப்பான தேடுதல் வேட்டை - ரிலீஸ் தேதியோடு வெளியான 'ரெய்டு 2' ட்ரைலர்!

சுருக்கம்

அஜய் தேவ்கன் நடிக்கும் 'ரெய்டு 2' படத்தின் ட்ரைலர் தற்போது, படத்தின் ரிலீஸ் தேதியோடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

அஜய் தேவ்கன் நடிக்கும் 'ரெய்டு 2' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அரசியல் வாதிகளை குறிவைத்து, தேடுதல் வேட்டை நடத்தும்  ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக்காக அஜய் தேவ்கன் மீண்டும் வருகிறார். முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சவுரப் சுக்லா இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க, ஸ்டைலிஷ் ஹீரோவாக பார்க்கப்பட்ட ரித்தேஷ் தேஷ்முக் கூலான இளம் வில்லனாக நடித்து மிரளவைத்துள்ளார். 

தாதா பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரித்தீஷ் தேஷ்முக் நடித்துளளார். அஜய் தேவ்கன் தன்னுடைய 75-ஆவது  ரெய்டில் சந்திக்கும் சவால்களும், பிரச்சனைகளும் தான் இந்த படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது.  2018 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 'ரெய்டு' படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 எடுக்கப்பட்டுள்ளது. 1980 களில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில், வாணி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள நிலையில், மே 1 ஆம் தேதி 'ரெய்டு 2' ரிலீஸ் ஆகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ('Raid 2' trailer released - Important update) பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் டீசீரிஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது . முதல் பாகத்தை இயக்கிய ராஜ் குமார் குப்தா இப்படத்தையும் இயக்குகிறார். அமித் திரிவேதி இசையமைக்கிறார். ரித்தேஷ் ஷா, ராஜ் குமார் குப்தா, ஜெய்தீப் யாதவ், கரண் வியாஸ் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். 

இந்த படத்தின் ட்ரைலர் இதோ:

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?
அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ