'இலை'ய 'கை'யில மறைக்கலாம்... மலைய மறைக்க முடியாது... ரஜினிக்காக சீமானோடு அதிமுகவையும் சீண்டும் ராகவா லாரன்ஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 17, 2020, 06:02 PM IST
'இலை'ய 'கை'யில மறைக்கலாம்... மலைய மறைக்க முடியாது... ரஜினிக்காக சீமானோடு அதிமுகவையும் சீண்டும் ராகவா லாரன்ஸ்...!

சுருக்கம்

ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ள அந்த ஒருவர் யார் என தெரியாத நிலையில், நாம் தமிழர் சீமானை தான் சொல்லி இருப்பார் என கருத்துக்கள் பரவி வருகிறது. 

ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள "தர்பார்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 'ஆதித்யா அருணாச்சலம்' என்ற மும்பை போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியுள்ளது.  முதல் பாதி, இரண்டாம் பாதி என எவ்வித பாகுபாடும் இல்லாமல் படம் சூப்பராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

70 வயது முதியவரின் நடிப்பை காண கூட்டம், கூட்டமாக மக்களை தியேட்டர்களை நோக்கி வரவழைக்கும் மேஜிக்கை ரஜினியால் மட்டுமே செய்ய முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.இந்நிலையில் "தர்பார்" படம்  குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ள டுவிட்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அதில், தலைவர் படம் ஓடாது என சிலர் நினைத்தனர். குறிப்பாக ஒருவர் நிறைய விஷயங்களை திட்டமிட்டு யாரும் பாடம் பார்க்க வேண்டாம் என வாட்ஸ் அப்பில் பரப்பி வந்தார். அதையெல்லாம் தாண்டி தலைவர் படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்துள்ளது.  இலையை கையால மறைக்கலாம். இலையை மறைக்க முடியாது. மலை டா அண்ணாமலை. அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்று கூறிப்பிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ள அந்த ஒருவர் யார் என தெரியாத நிலையில், நாம் தமிழர் சீமானை தான் சொல்லி இருப்பார் என கருத்துக்கள் பரவி வருகிறது. ஏற்கனவே தர்பார் இசை வெளியிட்டு விழாவில் சீமானை, ராகவா கழுவி ஊத்தியதை பலரும் நினைவு கூர்ந்துள்ளனர். மேலும் இலை, கை என்பதன் மூலம் தேவையில்லாமல் அதிமுகவையும் இழுத்து சிக்கலில் சிக்கிக்கொண்டார் ராகவா லாரன்ஸ் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 

ஏற்கனவே ரஜினிக்காக வாய்ஸ் கொடுத்த ராகவா லாரன்ஸை சீமான் தம்பிகள் சோசியல் மீடியாவில் வச்சி செய்தனர். அதை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல் மீண்டும் அதிமுகவையும் சேர்த்து வம்பிழுத்து மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?