அப்பா - அம்மாவை சாகடிக்க போற... காலில் விழுறேன்: ராகவா லாரன்ஸின் சிந்திக்க வைக்கும் கொரோனா விழிப்புணர்வு!

By manimegalai aFirst Published Mar 25, 2020, 5:24 PM IST
Highlights

தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து, வீடியோ வெளியிட்டு தங்களால் முடிந்த வரை, கொரோனா வைரஸின் தீவிரம் பற்றியும், அதனை தடுக்கும் ஒரே வழி... வீட்டின் உள்ளேயே இருப்பது தான் என சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்து வருகின்றனர்.
 

தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து, வீடியோ வெளியிட்டு தங்களால் முடிந்த வரை, கொரோனா வைரஸின் தீவிரம் பற்றியும், அதனை தடுக்கும் ஒரே வழி... வீட்டின் உள்ளேயே இருப்பது தான் என சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பளார் என பல்வேறு திறமைகளுடன் விளங்கும்... ராகவா லாரன்ஸ், சிந்திக்க வைக்க கூடிய புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் மேலும் 21 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதால், பலர் வேலைக்கு செல்ல முடியாத சூழலும், வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் சூழலும் உருவாகி உள்ளது.

இதனால் சென்னை போன்ற வெளியூரில் தங்கி வேலை செய்பவர்கள், தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு முனைப்பு காட்டி வருகிறார்கள். குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்க பட்டதால் ஓரிரு தினத்திற்கு முன் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் இந்த நேரத்தில் சொந்த ஊருக்கு செல்வதும் ஆபத்து என்பதை தெரிவிக்கும் விதமாக ராகவா லாரன்ஸ் வீடியோ வெளியிட்டு தன்னுடைய விழிப்புணர்வு பணியை சூப்பராக செய்துள்ளார்.

இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, "வணக்கம் எல்லோர் மனதிலும் சீக்கிரம் கொரோனா வைரஸ் போக வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.  கொரோனவை நம்மை விட்டு போக வேண்டுமென்றால் நாம்  வீட்டை விட்டு போகாமல் இருக்க வேண்டும். அரசாங்கம் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

இத்தாலியில் அரசாங்கம் சொன்னபோது அதை கேட்காததால் தற்போது அவர்களின் நிலை என்ன தெரியுமா? இறந்தவர்களின்  உடல்களை கூட  அடக்கம் செய்ய இடம் இல்லாமல் அழுது வருகின்றனர். அந்த நிலை நமக்கு வேண்டாம்... என கூறியபடி யாரோ ஒருவர் வெளியில் செல்வதை பார்த்து அழைக்கிறார்.


 இங்க வா தம்பி எங்க போற நீ... என்று அவர் கேட்க அதற்கு அந்த இளைஞர்  21 நாள் லீவு கொடுத்துள்ளதாகவும், அதனால் ஜாலியாக அப்பா - அம்மாவை பார்க்க செல்வதாக தெரிவிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் இது என்ன தீபாவளி பொங்கல் லீவா? ஜாலியாக இருக்க. அப்பா - அம்மா கூட சந்தோஷமா இருக்க தான  போறேன்னு சொல்ற,  உன் பெற்றோரை சாகடிக்க போற என கூறுகிறார்.

இதற்கு அந்த இளைஞர் அதிர்ச்சியாக என்ன சொல்றீங்க என கேட்க, அதற்கு ராகவா லாரன்ஸ் நீ இங்கிருந்து கிளம்பி போய் பஸ்ல உட்காருவ,  அங்க யாருக்காவது கொரோனா இருந்தால் அது உன்னிடம் வரும். நீ போய் அப்பா அம்மாவை கட்டி பிடித்தால் அது அப்பா அம்மாவுக்கும் வரும் அப்போ அவங்கள சாகடிக்குறதானான அர்த்தம்.

உடனே அந்த இளைஞர் பதறியபடி  ஊருக்கு போகவில்லை என கூறுகிறார். நீயும் வீட்டிலேயே இரு உன் பெற்றோரும் அங்கேயே இருக்கட்டும். இந்த நிலை மாறும் அப்பா - அம்மாவுடன் சந்தோஷமாக இரு என கூறி, உன் காலில் விழுந்து கேட்கிறேன் என ராகவா லாரன்ஸ் கூறியபடி இந்த வீடியோ வெளியாகியுள்ளது. 

 

 

click me!