
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் பிரபாஸ் (prabhas). இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவர் கைவசம் ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஸ்பிரிட், சலார் போன்ற படங்கள் உள்ளன.
இதில் ராதே ஷ்யாம் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியிட இருந்தனர்.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, புரமோஷன் பணிகளையும் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வந்தனர். ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.இதனை கருத்தில் கொண்டு ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இப்படம் ஓடிடி-யில் ரிலீஸாக உள்ளதாகவும், இதற்காக முன்னணி ஓடிடி தளம் ஒன்று ரூ.350 கோடிக்கு டீல் பேசி வருவதாகவும் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலைமை சீரானது இப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்பதையும் அறிவித்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நாளை போஸ்டர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதற்கிடையே வரும் மார்ச் 11 -ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.