RRR-யை தொடர்ந்து தள்ளிப்போகும் Radhe Shyam? தயாரிப்பு நிறுவனம் சொன்ன அதிகாரப்பூர்வமாக தகவல்

Published : Jan 03, 2022, 07:07 PM IST
RRR-யை தொடர்ந்து தள்ளிப்போகும் Radhe Shyam? தயாரிப்பு நிறுவனம் சொன்ன அதிகாரப்பூர்வமாக தகவல்

சுருக்கம்

கொரோனா அதிகரிப்பு காரணமாக ஆர் ஆர் ஆர் மூவி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரபாஸின் Radhe Shyam ரிலீஸும்  தள்ளிப்போவதாக தகவல் பரவி வருகிறது.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் பிரபாஸ் (prabhas). இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ராதே ஷ்யாம் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இது முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

இது முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 5 மொழிகளையும் சேர்த்து 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ‘பாகுபலி 2’ பட சாதனை, ராதே ஷ்யாம் படம் தற்போது முறியடித்து உள்ளது. இதன்மூலம் இந்தியளவில் ஒரே நாளில் அதிகம் பார்வைகளைப் பெற்ற டிரெய்லர் என்கிற சாதனையை ராதே ஷ்யாம் படத்தின் டிரெய்லர் படைத்துள்ளது.

இந்நிலையில் வலிமை மற்றும் தனுஷின் மாறன் ஜனவரி 13, 14-ல் வெளியாகவுள்ளதால்   ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் பரவியது. இது குறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் வம்சி சேகர் குறிப்பிட்ட தேதியில் ராதே ஷ்யாம் வெளியாகும் என உறுதிபடுத்தியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Jana Nayagan Deleted Scene: ஜனநாயகன் டெலிடட் சீன் எப்போ ரிலீஸ்? எச்.வினோத் கொடுத்த அடிபொலி அப்டேட்
யார் சொன்னா எம்ஜிஆர்னு.?! விஜய் ஒரு சுயம்பு தெரியுமா.?! போட்டுத்தாக்கும் சவுக்கு சங்கர்.!