இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நயன்தாரா.... ஒரு தலை காதலில் நாயகன்.. KRK-ல் இருந்து வெளியான பாடல்..

Published : Jan 03, 2022, 06:30 PM ISTUpdated : Jan 03, 2022, 06:33 PM IST
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நயன்தாரா.... ஒரு தலை காதலில் நாயகன்..  KRK-ல் இருந்து வெளியான  பாடல்..

சுருக்கம்

தற்போது  காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து 'நான் பிழை " என்னும் பாடல் வெளியாகியுள்ளது.  அனிரூத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகியுள்ள இந்தப்பாடலை ரவி ஜி மற்றும் சாஷா திருப்பதி இருவரும் பாடியுள்ளனர்.   

இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் விக்னேஷ் சிவன். சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியதன் மூலம் பிரபலமான இவர், தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவை காதலித்து வருகிறார். 

சுமார் 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள், தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இப்படம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது  படத்திலிருந்து 'நான் பிழை " என்னும் பாடல் வெளியாகியுள்ளது.  அனிரூத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகியுள்ள இந்தப்பாடலை ரவி ஜி மற்றும் சாஷா திருப்பதி இருவரும் பாடியுள்ளனர். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!