
பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை, பிவி.சிந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதால், அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் கிளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டுள்ளதாக, இந்த படத்தை தயாரிக்க உள்ள நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
உலக பேட்மிட்டன் வீராங்கனை பிவி.சிந்து சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில், தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் இவருடைய வாழ்க்கை வரலாற்று படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபல நடிகர் பாலிவுட் நடிகர் சோனு சூட் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியவர், இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும். தற்போது சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி.சிந்து வெற்றி பெற்றதால், இந்தப் படத்திற்கு புதிய கிளைமாக்ஸ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் தயாரிக்க உள்ள, இந்த படத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோன் பிவி.சிந்து வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சோனு சூட் முன்னாள் பேட்மிட்டன் வீரர் கோபிசந்த் கேரக்டரில் நடிக்கவும் உள்ளார்.
கோபிசந்த் ஆக நடிக்க தற்போது இவர் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். பொதுவாகவே மற்ற படங்களை விட வாழ்க்கை, ஒருவருடைய வாழ்க்கை வரலாறு படம் என்றால் அதில் அதிக சவால்கள் இருக்கும். குறிப்பாக விளையாட்டு வீரர்களின் படம் என்றால் உரிய பயிற்சியோடு தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.