
தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இரண்டு பாகமாக இப்படம் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது. இரண்டாம் பாகத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். புஷ்பா படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி சக்கைபோடு போட்டுள்ளது.
இதற்கிடையே புஷ்பா படத்தின் ப்ரோமோஷனுக்காக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை, ஐதராபாத் என முக்கிய நகரங்களில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகமெங்கும் திரைப்படவுள்ள புஷ்பா படத்திற்கான முன் பதிவு துவங்கியுள்ளது. அதன்படி டிசம்பர் 16-ம் தேதி அமெரிக்காவில் திரைப்படவுள்ள இந்த படத்திற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்தில் ($350) 2 கோடிக்கு அதிகமான வசூலை பெற்றுள்ளதாக திரையரங்கு உரிமையை பெற்றுள்ள Hamsini Entertainment தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.