Anbarivu On Hotstar : முன்னணி ஹீரோக்களோடு மோத தயங்கும் ஹிப் ஹாப் தமிழா?.நேரடி ஓடிடியில் வெளியாகும் 'அன்பறிவு'

Kanmani P   | Asianet News
Published : Dec 15, 2021, 11:24 AM IST
Anbarivu On Hotstar : முன்னணி ஹீரோக்களோடு மோத தயங்கும் ஹிப் ஹாப் தமிழா?.நேரடி ஓடிடியில் வெளியாகும் 'அன்பறிவு'

சுருக்கம்

Anbarivu On Hotstar : பொங்கல் விருந்தாக முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியாவதால் பல சிறு பட்ஜெட் படங்கள் ஓடிடி யில் வெளியாக ஆயத்தமாகி வருகிறது.  

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஆதி. ‘ஹிப்ஹாப் தமிழா’ என்ற தமிழ் மெல்லிசை குழு மூலமாக ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து, இசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.

அதனைத் தொடர்ந்து நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சுந்தர் சி இயக்கிய அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து நான் சிரித்தால், நட்பே துணை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம்  போதிய வரவேற்பை பெறவில்லை. 

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் தயாரித்து வருகிறது சத்யஜோதி நிறுவனம். இதனை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கி வருகிறார்.

'அன்பறிவு' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்து வருகிறார்கள். 

இந்நிலையில் ஆதியின் "அன்பறிவு"நேரடியாக ஓடிடி -ல் வெளியாகவுள்ளது. DisneyPlusHS-ல் வெளியாகவுள்ள இந்த படம் வரும் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் வலிமை, தனுஷின் மாறன், விக்ரமின் மஹான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு  பொங்கல் விருந்தாக முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியாவதால் பல சிறு பட்ஜெட் படங்கள் ஓடிடி யில் வெளியாக ஆயத்தமாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!