Pushpa item song :'புஷ்பா ஐட்டம் சாங் ஒரு தேசிய கீதமாக அகிலமெங்கும் வரும்'.. பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்...

Kanmani P   | Asianet News
Published : Dec 15, 2021, 09:17 AM ISTUpdated : Dec 15, 2021, 10:34 AM IST
Pushpa item song :'புஷ்பா ஐட்டம் சாங் ஒரு தேசிய கீதமாக அகிலமெங்கும் வரும்'.. பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்...

சுருக்கம்

Pushpa item song : ஓ சொல்றியா மாமா பாடல் இன்றைய குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு தேசிய கீதமாக அகிலமெங்கும் வரும்” என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  

இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். 

இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இப்படம் வருகிற டிசம்பர் 17-ந் தேதி ரிலீசாக உள்ளது. படத்தை புரமோட் செய்யும் வகையில், இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா (Samantha) கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். அவர் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதன்முறை. இப்பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார். 

ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், தற்போது சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதன்படி, இந்த பாடல் ஆண்களை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து இன்று சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் பேசிய தயாரிப்பாளர் தாணு;  ஓ சொல்றியா மாமா பாடல் இன்றைய குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு தேசிய கீதமாக அகிலமெங்கும் வரும்” எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!