ஏ.ஆர்.ரகுமானா இருந்தாலும் 10 மணிக்கு மேல பாடக்கூடாது! இசை நிகழ்ச்சியில் கெத்து காட்டிய போலீஸ் அதிகாரி!

Published : May 01, 2023, 05:39 PM IST
ஏ.ஆர்.ரகுமானா இருந்தாலும் 10 மணிக்கு மேல பாடக்கூடாது! இசை நிகழ்ச்சியில் கெத்து காட்டிய போலீஸ் அதிகாரி!

சுருக்கம்

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி 10 மணிக்கு மேல் நடைபெற்றதால்... காவல் துறை அதிகாரி ஒருவர் கெத்தாக மேடையில் ஏறி நிகழ்ச்சியை நிறைவு செய்ய கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.  

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் என்பதை தாண்டி, பாலிவுட் படமான ஸ்லம் டாக் மில்லினர் படத்திற்காக, இரண்டு ஆஸ்கர் விருதை பெற்றதன் மூலம் உலக அளவில் பிரபலமானவர் ஏ.ஆர்.ரகுமான். தற்போதைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் அடிக்கடி காப்பி சர்ச்சையில் சிக்கினாலும் கூட, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் எப்போதுமே கேட்பதற்கும், உணர்வதற்கும் ஒவ்வொரு முறையும் புதிதாக இருப்பது இவரின் தனி சிறப்பு என கூறலாம்.

எந்த நடிகராலும் செய்யமுடியாத சாதனைகளை செய்தவர் அஜித்..! தல-யை ரசிகர்கள் கொண்டாடவும் இது தான் காரணம்!

குறிப்பாக இவர் இசையில், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான... 'பொன்னியின்செல்வன் படத்தின் பாடல்கள் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரின் குழுவினர், பூனேவின் இசை கச்சேரி நடத்தியுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் மெய் மறந்து பாடிக்கொண்டிருந்ததால் அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை.

பூனேவில் 10 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது என, காவல்துறை கூறியுள்ள நிலையில்... தடையை மீறும் விதமாக, இரவு 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்ததை கண்டிக்கும் விதமாக, ஏ.ஆர்.ரகுமான் பாடிக்கொண்டிருந்த போதே... திடீர் என மேடைக்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு கெத்து காட்டினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதே போல் நெட்டிசன்கள் பலர், இந்த காவல் அதிகாரியின் கடமை உணர்ச்சியை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேசியே ஜீரோவாகிறார் ரஜினிகாந்த்..! சூப்பர் ஸ்டாரை தாறுமாறான தாக்கி பேசிய நடிகை ரோஜா!

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
கிரேட் எஸ்கேப்... ராஜா சாப் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் ‘இந்த’ தமிழ் நடிகரா? - நல்ல வேளை அவர் நடிக்கல..!