பேசியே ஜீரோவாகிறார் ரஜினிகாந்த்..! சூப்பர் ஸ்டாரை தாறுமாறான தாக்கி பேசிய நடிகை ரோஜா!

Published : May 01, 2023, 04:32 PM IST
பேசியே ஜீரோவாகிறார் ரஜினிகாந்த்..! சூப்பர் ஸ்டாரை தாறுமாறான தாக்கி பேசிய நடிகை ரோஜா!

சுருக்கம்

புதுவையில் நடந்த, புஷ்கரணி விழாவில், கலந்து கொண்ட நடிகை ரோஜா ரஜினிகாந்த் குறித்து விமர்சித்து பேசியுள்ளது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

புஷ்கரணி விழா, கடந்த 22-ம் தேதி துவங்கிய நிலையில், மே 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நேற்று மாலை பங்கேற்று சிறப்பித்தார். மேலும் இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

சுவாமி தரிசனம் சசெய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ரஜினிகாந்தை விமர்சனம் செய்யும் வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய நடிகை ரோஜா, "ரஜினிகாந்த் சார் அரசியல் வேண்டாம் என நினைத்து விட்டார்... அவர் வேண்டாம் என விலகிவிட்ட நிலையில், பாலிடிக்ஸ் பற்றி பேசக்கூடாது. என்டிஆர் எங்களைப் போல் ஒரு ஆர்டிஸ்ட். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். அவரை ஆந்திராவில் ஒரு கடவுளாக பார்ப்பார்கள்.  குறிப்பாக கிருஷ்ணன் என்றால் ஆந்திர மக்கள் நினைவுக்கு வருவது என்.டி.ஆர் தான். அவரை எப்படி கொன்றார்கள் என்பது ரஜினி சாருக்கு நன்றாக தெரியும்.

வேற லெவல்... மூன்றே நாளில் 'பொன்னியின் செல்வன் 2' படம் இத்தனை கோடி வசூலித்துவிட்டதா? முழு விவரம்!

ரஜினிகாந்துக்கு தெரியாமல் தான் ஏதோ தப்பா பேசுகிறார் என்று நினைத்தேன். ஆனால் தெரிந்து தான் தப்பா பேசி இருக்கிறார.  அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.  தெலுங்கானாவில் எல்லோருமே ரஜினிகாந்தை ஒரு சூப்பர் ஸ்டாராகவும், ஒரு நல்ல நடிகராக கொண்டாடுகின்றனர். ஆனால் இவர் பேசியுள்ள விஷயம் தெலுங்கு மக்கள் மற்றும் என்டிஆர் அபிமானிகள் என எல்லோரையுமே கோபப்படுத்தியுள்ளது.

என் டி ஆர்-ஐ கொலை பண்ணுனது யார்? அதற்க்கு திட்டம் போட்டது யார் என ஆந்திர மக்கள் நன்கு அறிந்தும்.  சந்திரபாபு நாயுடுவை என்.டி.ஆர் மேலே இருந்து ஆசீர்வதிப்பார் என கூறியுள்ளது மிகப்பெரிய தப்பு. இதுபோன்ற விஷயங்களை பேசி அவர் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு செல்வது, அவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர் சொன்னபடி பேசுவது சரியான ஒன்று அல்ல. ரஜினியை ஒரு டாப்பில் வைத்துள்ளனர் ஆத்திர மக்கள். ஆனால் அவர் இது போல் அவர் ஜீரோ ஆவது ஒரு ஆர்டிஸ்ட்டாக எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்தால் பேச வேண்டும், தெரியவில்லை என்றால் பேசக்கூடாது. நாம உண்டு, நம்ம வேலை உண்டு... என்று வந்தால் நன்றாக இருக்கும் என ரோஜா செல்வமணி பேசியுள்ளார்.

கழுத்தை நெரிந்த கடன்..! பிரபல நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..!

ரஜினிகாந்த் இதற்க்கு மன்னிப்பு கேட்கவேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்விஎழுப்பியதற்கு, மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர் எந்த அரசியல் காட்சியிலும் இல்லை. தெரிந்து பேசினாரா... அல்லது தெரியாமல் பேசினாரா.. என்பது தெரியாது. எனவே உண்மை என்ன என்பதை தெரிந்து கொண்டு, ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என காட்டமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anupama Parameswaran : அம்மாடியோ!!! டைட்டான உடையில் உடலை நெளித்து நளினம் காட்டும் 'அனுபாமா' போட்டோஸ்
Iswarya Menon : அவள் உலக அழகியே!! லெகங்காவில் நடிகை ஐஸ்வர்யா மேனனின் கண்கவர் கிளிக்ஸ்!